பொத்துவில் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன மோட்டார் பைசிக்கள் கண்டுபிடிப்பு - Sri Lanka Muslim

பொத்துவில் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன மோட்டார் பைசிக்கள் கண்டுபிடிப்பு

Contributors
author image

A.M.தாஜகான்- Pottuvil (M.A. M.ED)

பொத்துவில் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன மோட்டார் பைசிக்கள்  பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள அன்சன்ஸ் காட்வெயார் முன்னிலையில் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த மோட்டார் பைசிக்களின் உரிமையாளர் ஏ.அப்துல் றஊப் மௌலவியாவார் .பொத்துவில் பிரதேசத்தின் மண்மலைப்பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் வைத்து 06 மாதம் 20 ம் திகதி திருடப்பட்ட இச் சைக்கிள் சுப்பர் ஸ்பிலன்டர்  BAT-2291 இலக்கத்தையுடையதாகும். இன்று இரவு 14 திகதி  பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள அன்சன்ஸ் காட்வெயார் முன்னிலையில் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த மோட்டார் பைசிக்கள் மண்ணில் புதைக்கப்பட்ட அடையாளம் தென்படுகின்றது. உப்புத்தன்மையும் ஆங்காங்கே தென்படுகின்றது.குறித்த மௌலவியின் பைசிக்கள் களவாடப்பட்டு புதைக்கப்பட்டது மற்றும் கொண்டு வந்து பிரதான சந்தியில் வைக்கப்பட்டது ஏன் என்பது மர்மமாக உள்ளது.

 

குறித்த பைசிக்கள் மூடப்பட்ட நிலையில் பொத்துவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காவலில் உள்ளனர்.அம்பாறை குற்றப் புலனாய்வு பொலிஸ் மோப்ப நாய் வந்து சோதனையிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team