பொத்துவில் முஹுது மகா விகாரை உட்பட புதிய மூன்று இடங்கள் புனித இடமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது! - Sri Lanka Muslim

பொத்துவில் முஹுது மகா விகாரை உட்பட புதிய மூன்று இடங்கள் புனித இடமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது!

Contributors

புதிதாக 3 இடங்கள் புனித பூமிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, பொத்துவில் முஹுது மகா விகாரை, ஹுனுபிட்டிய கங்காராம விகாரை மற்றும் குரகல ரஜாமகா விகாரை ஆகிய 03 இடங்களும் அவ்வாறு புனித பூமிகளாக அறிவிக்கப்பட்டுள்ள புனித பூமிகளாகும்.

அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் நகர வீடமைப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணுதுங்கவினால் கையொப்பமிடப்பட்டுள்ளது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் மூலம் அந்த 3 இடங்களும் புனித பூமிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த நாட்டில் புனித பூமிகளாக 78 இடங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1961 ஒக்டோபர் 16 அன்று கதிர்காமம் இந்த நாட்டின் முதலாவது புனித பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு 3 மாதங்களுக்கு முன்பு நாகதீப ரஜமகா விகாரை 78 ஆவது புனித பூமியாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இப் புனித இடங்கள்  தேசிய  பிராந்திய மற்றும் பிரதேச வாரியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இவ்வாறாக தெரிவு செய்யப்படுகின்றன. தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் புத்தசாசன அமைச்சின் அங்கீகாரத்துடன் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டன.

அனுராதபுரம; கதிர்காமம;   பொலன்னறுவை , சொலஸ்மஸ்தான ரஜமகாவிகாரை, மடு தேவாலயம், முஹுது மகா விகாரை , அம்பாறை தீகவாபி, திருகோணமலை கிரிகடு சேய, மாத்தறை கொலவெனிகம ரஜமகா விகாரை, பிங்கிரிய தேவி கிரி ரஜமகா விகாரை, சேருவில ரஜமகா விகாரை, அலு விகாரை மாத்தளை உள்ளிட்ட புனித பூமிகள் பலவற்றின் அபிவிருத்திகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team