பொன்தீவு கண்டல் கிராமத்தில் உள்ள மக்களுக்கு பாகுபாடுகள் இன்றி உதவிகள் மேற்கொள்ளப்படும்- றிப்கான் பதியூதீன். - Sri Lanka Muslim

பொன்தீவு கண்டல் கிராமத்தில் உள்ள மக்களுக்கு பாகுபாடுகள் இன்றி உதவிகள் மேற்கொள்ளப்படும்- றிப்கான் பதியூதீன்.

Contributors

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் முஸ்ஸிம்
மக்களுக்கு வழங்கப்பட்ட காணி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் நிலை சமரச பேச்சு வார்த்தையின் பின் இனக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும் , எதிர் கட்சியின் பிரதம கொறாடவுமான றிப்கான் பதியூதீன் தெரிவித்தார் .
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,,,,
பொன்தீவு கண்டல் கிராமத்தில் 46 குடும்பங்களுக்கு நானாட்டான் பிரதேச செயலகத்தினூடாக காணிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் தமது காணிகளில் வீடுகளை அமைக்கும் ஆரம்ப பணியில் ஈடுபட்டு வந்தனர் .
இந்த நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் எதிர்ப்பினால் குறித்த வேளைத்திட்டங்கள் கைவிடப்பட்டிருந்தது .
இதனைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ் . சந்திரையா , மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் கிராம மக்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண அமைச்சர் , மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது .
இந்த நிலையில் பாதீக்கப்பட்ட குறித்த 46 குடும்பங்களும் புவரசங்குளம் பகுதியில் உள்ள உறவினர்களுடைய வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் .
– குறித்த 46 குடும்பங்களுக்கும் வீடு அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதி திரும்பும் தருவாயில் உள்ளது இதனால் அந்த மக்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் . .
– இந்த நிலையில் பொன்தீவு கண்டல் கிராம மக்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக ஒரு இனக்கப்பாட்டிற்கு வந்துள்ளது எனினும் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . .
– . . எனினும் சக மக்களின் ஆதரவோடு அந்த 46 குடும்பங்களுக்குமான வீட்டு வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் பொன்தீவு கண்டல் கிராமத்தில் தமிழ் , முஸ்ஸிம் என்ற பாகுபாடுகள் எவையும் இன்றி அந்த மக்களுக்கு சகல உதவிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் .

Web Design by Srilanka Muslims Web Team