பொரளையில் பாரிய தீ பரவல்! - Sri Lanka Muslim
Contributors

பொரளை – கிதுள்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டது.

பொரளை, கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தெரியவராத நிலையில் பொரளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team