பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு » Sri Lanka Muslim

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு

noba

Contributors
author image

Editorial Team

(BBC)


அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார அறிஞரும், பகுத்தறிவுக்கான மனித நடத்தையின் பொருளாதார அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான ரிச்சர்ட் டாலெர், இவ்வாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.

சிகாகோவில் உள்ள பூத் வணிகப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட் , பரவலாக விற்கப்பட்ட `நட்ஜ்` (Nudge) புத்தகத்தின் இணையாசிரியர் ஆவார்.

இந்தப் புத்தகமானது எப்படி மக்கள் மோசமான மற்றும் பகுத்தறிவற்ற விஷயங்களை தேர்வு செய்கிறார்கள் என்பது குறித்து விவரித்தது.

ரிச்சர்ட் விவரித்துள்ள `நட்ஜிங்`கானது (ரிச்சர்டால் உருவாக்கப்பட்ட சொற்பதம்), மக்கள் எப்படி சுயகட்டுபாட்டுடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதவும் என்று விருது குழுவினர் கூறினார்கள்.

9 மில்லியன் சுவிடீஷ் க்ரொனாக்களை (850,000 பவுண்ட்) பரிசுத் தொகையாக ரிச்சர்ட் பெறுவார்.

பேராசிரியர் ரிச்சர்டின் பணிகள்தான், பிரிட்டன் `நட்ஜ் யூனிட்` என்ற ஒரு அமைப்பை முன்னாள் பிரதமர் டேவிட் கேமரன் தலைமையில் உருவாக காரணமாக அமைந்தது.

இந்த அமைப்பு 2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மக்களின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது. இதன் அலுவலகம் பிரிட்டன், நியூயார்க், சிங்கப்பூர், மற்றும் சிட்னியில் அமைந்துள்ளன.

விருது தேர்வுக் குழுவில் ஒருவரான பெர் ஸ்ட்ரோம்பெர்க், பேராசிரியர் ரிச்சர்ட்டின் பணிகள், மனித உளவியல் நடவடிக்கைகள் எவ்வாறு பொருளாதார முடிவுகள் உருப்பெறக் காரணமாக அமைந்தன என்பது குறித்து ஆராய்ந்தது என்றார்.

மேலும் அவர், “ரிச்சர்டின் கண்டுப்பிடிப்புகள், பல ஆய்வாளர்களை அவரைப் பின்பற்றி செயல்பட வைத்தது. பொருளாதாரத்தில், மனிதர்களின் பகுத்தறிவு நடத்தை பொருளாதாரம் என்ற புதிய துறை உருவாக அவரது ஆய்வுகள்தான் வழிவகுத்தன.” என்றார்.

Web Design by The Design Lanka