பொறுப்புதாரிகளே உங்களைத்தான்: கண் திறக்குமா தலைமைகள்? » Sri Lanka Muslim

பொறுப்புதாரிகளே உங்களைத்தான்: கண் திறக்குமா தலைமைகள்?

muslim

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சாமானியன் – அபூ ஸுமையா


நாளாந்தம் இனவாதத்தீயில் கறுகிவரும் எமது சமுதாயத்தின் பொருளாதார பாதிப்பை முடிந்தளவு குறைத்துக் கொள்வதற்காக சாத்வீகமான தற்காப்பு நடவடிக்கைகள் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை பல வருடங்களாக எழுதியும் பேசியும் வருகிறோம்.

ஆனால் சொல்வது யாரென்று பார்த்துவிட்டு லாவகமாக தட்டிவிடும் அறிவிலித்தனமான உச்சநிலை இயக்கவெறி சமுதாயத்தில் மேலோங்கி நிற்பதால்! தன்னை சுற்றியுள்ள ஆபத்தை கண் திறந்து பார்க்க வேண்டிய சந்தர்பங்களிலும், தனது பதவி, புகழ், அந்தஸ்த்து என்பவற்றையே கண் பிதுக்கி பார்க்கின்றனர்.

அதன் விளைவுகள் கண் முன்னால் காட்சியாகின்றன. “இவர்கள் சொல்லி நாங்கள் கேட்க வேண்டுமா” எனும் மெடீகப் பாதையில் சமூகத்தின் சக்கரம் அச்சாணியை இழந்து ஆபத்தை நோக்கி சுழன்றுகொண்டிருக்கிறது.

தற்காப்பை எழுதினால் சில மேதாவிகள் தாக்குதல் பற்றி விவாதிக்க வருகின்றமையும், ஆரோக்கியமான ஆலோசனை என ACJU மற்றும் பள்ளிவாயல்களின் நிர்வாகங்கள் போன்ற முக்கிய ஸ்தளங்களை விழித்து சமூக நலனுக்காக எழுதினால்! விமர்சனம் எனும் பார்வையில் வெறுப்புடன் பார்க்கின்றமையும், சமூகம் தன்நிலை உணராததை படம் பிடித்துக் காட்டுகின்றது.

தம்மை சுற்றி வேட்டை பிராணிகள் வெறியுடன் சூழ்ந்திருக்க, நாம் வேட்டையாடிய முயலுக்காக எமக்குள் சண்டை பிடித்துக் கொண்டிருப்பதற்கு ஒப்பாக உள்ளது எம் சமூக நிலை.

இந்நிலை மாற வேண்டும். இலங்கை சோஷலிச குடியரசின் சட்டவாக்கத்துக்கு உற்பட்ட தற்காப்பு நடவடிக்கைகளில் சமூகத்தை வழிநடாத்துவோர் உடனடியாக இறங்கியாக வேண்டும்.

எமக்கென்று
> தீயனைப்பு அணியும்
> அம்பலன்ஸ் சேவைகளும்
> அவசர மருத்துவ முகாம்களும்
> முறையாக (ஆண்மீகம் உற்பட) பயிற்றுவிக்கப் பட்ட ஊர் பாதுகாப்பு அணிகளும் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். இவற்றை சட்ட ரீதியாகவே செய்ய வழியிருந்தும் செயலாற்றாது இருப்பது எம் சமூகத்தின் தலைமைகளது கையாளாகாத் தன்மைக்கான அடையாளமாகும். இனியும் இந்நிலை தொடரக் கூடாது.

நான் அறிந்தவரை தீயணைப்பு இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள், தண்னீர் பௌசர்கள் மற்றும் திரிவூர்திகள் உற்பட்ட தற்காப்பு முறைமைகளை பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் பராமரிக்க முடியும். அதே போன்று தனியார் நம்பிக்கை வாரியங்களினால் பராமரிக்க முடியும். மேலும் அல்லது வக்ப் சட்டத்தின் அடிப்படையில், மஸ்ஜிதுகள் மூலமாகவும் பராமரிக்க முடியம்.

இதைவிட சிறந்த வழிகளை தகுதிவாய்ந்த சட்டத் தரணிகள் ஊடாக விசாரித்தறிந்து அவற்றுக்கான முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பின்வாங்கவோ சாத்தியமா என சிந்திக்கவோ வேண்டிய அவசியமே இல்லை எனும் அளவுக்கு நம் சமுதாய தனவந்தர்கள் வாரிவழங்க தயாராகவே உள்ளார்கள்.

எந்த ஒரு இனவாதப் போராட்டத்தினதும் இலக்கு இனச்சுத்திகரிப்பு என்பதற்கு வரலாறு தக்க சான்றாக உள்ளதை கணக்கெடுக்காது தலைமைகள் இருக்குமாயின்! அதைவிட இச்சமூகத்துக்கு தலைமைகளால் இழைக்கப்படும் பெரும் துரோகங்கள் பிரிதொன்று இருக்க முடியாது.

தயவு செய்து கவனத்தில் எடுங்கள். வீழ்வதும், வீழ்தப் படுவதும் தவறல்ல. தெரிந்து கொண்டே வீழ்வதும், வீழ்ததப் பட்ட பின்னரும் எழாதிருப்பதுமே தவறாகும்.

எனது அபயக்குரல் சமுதாயத்துக்கானதாகும். இது தாக்குதலுக்கான அழைப்பல்ல. சமூகத்தின் தற்காப்புக்கான பொறுப்புமிக்க அழைப்பாகும்.

உணர்வு பெறுவோம்.
கடமைகளை உணர்வோம்.
கச்சிதமாய் திட்டமிடுவோம்.

“யா அல்லாஹ் உன்னை ஏற்ற உன் அடியார்களை நீயே பாதுகாத்து அருள் புரிவாயாக”

Web Design by The Design Lanka