பொலிஸ் நிலையம் மீது குண்டுத் தாக்குதல் நடாத்த திட்டம் என தவறான தகவல் வழங்கிய பெண் கைது..! - Sri Lanka Muslim

பொலிஸ் நிலையம் மீது குண்டுத் தாக்குதல் நடாத்த திட்டம் என தவறான தகவல் வழங்கிய பெண் கைது..!

Contributors

பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்தாக 119 ஊடாக தகவல் வழங்கிய 23 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு இவ்வாறு தொடர்பு கொண்ட குறித்த பெண், தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தப்படவுள்ளதாக தகவல் வழங்கியுள்ளார்.

நாவலபிட்டிய முகவரியொன்றில் பதிவான தொலைபேசி இலக்கத்திலிருந்தே இவ்வழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, சந்தேக நபர் தனது குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு தான் நாவலபிட்டியவில் சகோதரி வீட்டுக்குச் சென்ற போதிலும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டது யார் எனத் தெரியாது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team