போதைவஸ்தை இல்லாதொழிக்க எதிர்கட்சி தலைவர் யோசனை » Sri Lanka Muslim

போதைவஸ்தை இல்லாதொழிக்க எதிர்கட்சி தலைவர் யோசனை

Contributors

உரிய விசாரணை மேற்கொண்டு போதை வஸ்து அழிப்பு நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளுமானால், அதற்கு ஆதரவளிக்கப்படும் என்று எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் காலி தொகுதி அமைப்பாளர்களது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனை நிறுத்த அரசாங்கம் முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாயின் அதற்கு பூரண ஒத்தழைப்பை வழங்க நாம் தயார். முழுமையான விசாரணை நடத்த வேண்டும், சுயாதீன ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்தி, சுயாதீன நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

சர்வதேச போதை தடுப்பு குழுவினரை இலங்கைக்கு கொண்டு வரவேண்டும், இந்தியா, பாகிஸ்தான், ஆசிய நாடுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டால் இந்த போதை பொருள் கடத்தலை 24 மணி நேரத்தில் இல்லாது செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team