போர்க்காலத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் விழித்துக் கொண்டுள்ளனர்! - Sri Lanka Muslim

போர்க்காலத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் விழித்துக் கொண்டுள்ளனர்!

Contributors

qou53
போர் இடம்பெற்ற காலத்தில் உறங்கிக் கொண்டிருந்த வெள்ளையர்கள் தற்போது விழித்துக் கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகள் புலிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்ட போது வெள்ளைக்காரர்கள் எவ்வித குரலும் எழுப்பவில்லை.

தனிநாட்டுக் கோரிக்கை மீளவும் வலுப்பெறுகின்றது.

உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் தனிநாட்டுக் கோரிக்கை ஆதரவளிக்கப்படுகின்றது.

இதன் ஓர் கட்டமாகவே இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது,

வேற்று மத அமைப்புக்களும் இந்த சூழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளன என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.(LW)

Web Design by Srilanka Muslims Web Team