போலந்து அகதி முகாமில் காளான் உண்ட ஆப்கான் சிறுவன் பலி..! - Sri Lanka Muslim

போலந்து அகதி முகாமில் காளான் உண்ட ஆப்கான் சிறுவன் பலி..!

Contributors

தலிபான்கள் காபுலை கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் வெளியேற்றப்பட்ட ஐந்துவயது சிறுவன் போலந்தில் காளானை உண்டதில் உயிரிழந்துள்ளான். சிறுவனின் ஆறுவயது சகோதரனும் காளான் உண்டதால் பாதிக்கப்பட்டான் அவனிற்கு ஈரல் மாற்றுகிசிச்சை செய்யப்பட்டது அவனது உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


23 ம் திகதி காபுலில் இருந்து புறப்பட்ட சிறுவர்கள் குடும்பத்தினருடன் போலந்து வோர்சோவில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நஞ்சுக்காளானை உண்டதை தொடர்ந்து சகோதரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இரு சிறுவர்களையும் துரதிஸ்டவசமாக காபாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ள மருத்துவமனையின் இயக்குநர் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளார்.
ஐந்துவயது சிறுவனிற்கு மூளை பாதிப்பு ஏற்பட்டது,அதனால் அவனது சகோதரனை போல ஈரல்மாற்று கிசிச்சையை மேற்கொள்ள முடியவில்லை அவரது சகோதரனின் நிலையும் நம்பிக்கை தரும்; விதத்தில் இல்லை அந்த சிறுவனுக்கும் மூளை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என மருத்துவர் தெரிவித்துள்ளார்.


நஞ்சுக்காளானை உண்ட 17 வயது ஆப்கான் யுவதியொருவர் மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வெளியேறியுள்ளார். ஆப்கான் குடும்பத்தவர்கள் காட்டுப் பகுதியொன்றிலிருந்து காளானை பறித்து உணவாக்கி உண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களிற்கு போதிய உணவு வழங்கப்படாததன் காரணமாகவே அவர்கள் காளான்களை உண்டனர் என வெளியான செய்திகளை உள்ளுர் மக்கள் நிராகரித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team