போலியான PCR ஆவணங்களை பயன்படுத்திய யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..! - Sri Lanka Muslim

போலியான PCR ஆவணங்களை பயன்படுத்திய யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

Contributors

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வன்னியைச் சேர்ந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான ஆவணங்கள் மற்றும் கொரோனா தொற்று இல்லையென்ற போலியான பி சி ஆர் பரிசோதனை முடிவுகளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி முல்லைத்தீவு மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இன்று காலை கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முனைகையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரின் ஆவணங்களை சோதனை செய்கையில் அவை அனைத்தும் போலியானவை என கண்டறிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றவியல் விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.   

Web Design by Srilanka Muslims Web Team