போலி ஆவணம் தயாரித்தவர் கைது » Sri Lanka Muslim

போலி ஆவணம் தயாரித்தவர் கைது

aress

Contributors

aress

போலி ஆவணங்கள் தயாரித்து இஸ்லாமிய  சமய முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்கு வழங்கப்படும் நடத்தைச் சான்றிதழை வழங்கிய கெக்கிராவை ஒலம்பேவை பிரதேச வாசியொருவர் அனுராதபுர கோட்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்காக கல்முனைப் பிரதேச மௌலவி ஒருவரின் கையொப்பத்தை போலியாகப் போட்டு போலியான ஆவணத்தைத் தயாரித்துள்ளார் என்றும் இதற்கு அவர் ரூ  35000/- அறவிட்டுள்ளார் என்றும் பொலிசார் கூறியுள்ளனர். மதவாச்சி இக்கிரிகொல்லாவை ஜூம்மா பள்ளிவாசல் தலைவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.-TC

Web Design by The Design Lanka