போலி பட்டத்தில் 6 வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது - Sri Lanka Muslim

போலி பட்டத்தில் 6 வருடங்கள் ஆசிரியராக பணிபுரிந்தவர் கைது

Contributors

போலி பட்டப்படிப்பு சான்றிதழ் ஆவணங்களை சமர்பித்து 6 வருடங்களாக ஆசிரியர் தொழில் புரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட சென் ஜோசப் வித்தியாலயத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஒருவர் ஆசிரியராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தில் பெற்றதாக் கூறி பொருளியல்துறை கௌரவ பட்டத்திற்கான ஆவணத்தையும் அவர் சமர்பித்துள்ளார்.

குறித்த நபர் குறித்து கொழும்பு மோசடி ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறாது போலி ஆவணங்களை சமர்பித்து ஆறு வருடங்களாக அரசாங்கத்திடம் சம்பளம் பெற்று நிதி மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் வரக்காபொல பகுதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபர் இன்று (18) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். (அத தெரண )

Web Design by Srilanka Muslims Web Team