போலீசார் தாக்கும்போது , பொதுமக்கள் தமது உயிரை காப்பாற்ற தற்காப்பு நடவடிக்கை எடுக்க முடியும் ; அஜித் ரோஹான - Sri Lanka Muslim

போலீசார் தாக்கும்போது , பொதுமக்கள் தமது உயிரை காப்பாற்ற தற்காப்பு நடவடிக்கை எடுக்க முடியும் ; அஜித் ரோஹான

Contributors

காவல்துறையை சேர்ந்த ஒருவர் கடமையில் இருக்கும்போது தனது அதிகாரங்களை தவறாகப்


பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்ட நிலையில் அவரால் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் உயிருக்கு ஆபத்தான தாக்குதலுக்கு ஆளாகும் போது , தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தற்காப்பு நடவடிக்கைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி) அஜித் ரோஹான தெரிவித்தார்.


பொலிஸ் அதிகாரி தனது கடமையில் இருக்கும்போது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தினால் மட்டுமே பொதுமக்களால் தற்காப்பு வழிகளை பயன்படுத்த முடியும் என டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெளிவுபடுத்தினார்.சட்டத்தின் படி, பொதுமக்கள் தங்களது உடல்நலம் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும், ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் இவ்வாறன சம்பவ நேரத்தில் நிராயுதபாணிகளாக உள்ளனர்.நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமானது, இது நியாயமான முறையில் செயல்படுத்தப்படும் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.நேற்று பன்னிப்பிட்டியில் வீதியின் நடுவில் ஒரு லாரி டிரைவரை காவல்துறை அதிகாரி தாக்குவது குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது டிஐஜி அஜித் ரோஹானா இதைக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team