பௌத்த உரிமைகளை பாதுகாப்பதாக கூறி ஞானசார தேரர் சத்தியாக்கிரக போராட்டம்! - Sri Lanka Muslim

பௌத்த உரிமைகளை பாதுகாப்பதாக கூறி ஞானசார தேரர் சத்தியாக்கிரக போராட்டம்!

Contributors

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (11) வியாழக்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்படி போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையானது பௌத்த நாட்டில் பௌத்த அமைப்புக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன. என்ற தவறான நிலைப்பாட்டை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை தோற்றுவித்துள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தவறான செயற்பாடு என்பதை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம்.பௌத்த உரிமைகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ள அவர், அதனை வலியுறுத்தியே சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team