பௌத்த அலையை எழுப்பியதில் நாங்கள் முன்னோடிகள்- அத்துரலிய ரத்ன தேரரின் சூடான பேட்டி - Sri Lanka Muslim

பௌத்த அலையை எழுப்பியதில் நாங்கள் முன்னோடிகள்- அத்துரலிய ரத்ன தேரரின் சூடான பேட்டி

Contributors

qout136

-நிரஞ்சலா ஆரியவன்ச-
-தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்-
-சிலோன் ருடே-

அத்துரலிய ரத்ன தேரர் அவர்களுடன் சிலோன் ருடே நடத்திய ஒரு நேர்காணலில் பௌத்த மதகுருக்களின் வாழ்க்கைப்பாணி காலத்துக்கு ஏற்ப மாறியுள்ளதை ஒப்புக்கொண்ட அவர், மதகுருக்கள் அரசியலில் இறங்குவதற்கான காரணங்களையும் கூறினார்.

கேள்வி: பிக்குமார்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டதா?Athuraliye Rathana Thera

பதில்: ஆம், அந்த துறையை சாராதவர்களைப் போல பிக்குகளின் வாழ்க்கையும் மாறிவிட்டது. சிறு பிள்ளைகளைப் போல நாங்களும் நேரத்துடன் எழுவதையும் மற்றும் நேரத்துடன் படுக்கைக்கு செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தோம், ஆனால் இப்போது நாங்கள் நேரங்கழித்து படுக்கைக்கு செல்வதும் மற்றும் காலையில் சற்று நேரங்கழித்து எழுவதுமாக உள்ளோம். அதற்கான காரணம் மக்களின் வாழ்க்கை மாறிவிட்டதுதான்.

 

நாங்கள் கோவில்களுக்கு தாமதமாகத்தான் செல்கிறோம். இப்போது மக்கள் மிகவும் நேரமில்லாமல் உழைப்பதால் இரவு நேரங்களில்தான் அவர்கள் நீதி போதனைகளை கேட்க வருகிறார்கள். கடந்த காலங்களில் மாதத்தில் வரும் நான்கு போயா தினங்களிலும் சில் அனுசரித்ததை போலில்லாமல், மக்கள் இப்போது ஞ}யிறு தினங்களில் மட்டும் மத அனுட்டானங்களைக் கடைப்பிடிக்கிறார்கள்.
சாதாரண மனிதனின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மதகுருக்களின் வாழ்க்கையிலும்கூட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது ஒரே மாதிரியானது, அதாவது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சரிவு பிக்குகள் சமூகத்திலும் பிரதிபலிக்கிறது. இன்று பொளத்த துறவிகள் தொழில் நிபுணர்களைப்போல மாறியுள்ளார்கள்.

 

 

 

சிலர் ஜோதிடத்தின் பாதையை நோக்கி திரும்பியுள்ள வேளையில் மற்றும் சிலர் இயற்கையை கடந்த விவகாரங்களில் நம்பிக்கை கொண்டவர்களாக மாறியுள்ளதுடன் அவற்றுக்கு கட்டணமும் அறவிடுகிறார்கள். துறவிகளின் வாழ்க்கையும் கூட வியாபாரம் ஆகிவிட்டது.

 

 

 

கேள்வி: இன்றைய நாட்களில் திருநிலைப் படுத்தப்படும் பெரும்பாலான குழந்தைகள் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். அவர்கள் தங்கள் படிப்பை முடித்ததும் தங்கள் காவியை களைந்துவிட்டு தங்கள் குடும்பத்துக்கு உதவி செய்யப் போய்விடுகிறார்கள். இந்த நிலைமையை நீங்கள் எவ்வாறு ஆய்வு செய்வீர்கள்?

 

 
பதில்: கடந்த காலத்திலும் இது பொதுவான ஒரு விடயம்தான். அப்போதும் சிறுவர்களாக திருநிலைப் படுத்தப்படும் துறவிகள் பின்னர் தங்கள் காவியுடையை களைந்து வெளியேறினார்கள். துறவறம் மேற்கொண்ட அனைவரும் அதை தொடரவில்லை. ஆனால் இன்று அந்தப் போக்கு அதிகரித்துள்ளது.

 

 
அதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு பக்கம் சமூகம். பொருட்களின் மீதான பற்று இன்று அதிகமாக உள்ளது. இதற்கான மற்றொரு காரணம் சரியான ஆன்மீகக் கல்வி போதிக்கப் படுவதில்லை என்பதாகும். பிக்குகள் உயர் கல்வியை பெறுவதில் தவறொன்றுமில்லை. ஆனால் இன்றைய காலத்தில் பிக்குகளுக்கான முறையான கல்வி இல்லை.

 

 

 
இன்றைய பொதுவான கல்விமுறையானது,கல்வியறிவில்லாமல் புத்தகம் எழுதுவதற்கு சமமானது. உண்மையில் கற்றவைகள் யாவும் நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை, தற்போதைய கல்விமுறை பரீட்சைகளையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அது ஒரு நெருக்கடியான நிலைமை. பௌத்தம் ஒரு நடைமுறைக் கல்வி. பிக்குமார்களுக்கான கல்வி என்பது ஒரு சிறந்த ஆன்மீகத் தலைவரின் கீழ் பயிற்சி பெறுவது ஆகும். அங்கு நாங்கள் முற்றாக மாற்றமடைகிறோம்.

 

 

 

கேள்வி: மக்கள் துறவறம் பூணுவது வெறுமே பிக்குகளுக்கான சலுகைகளை அனுபவித்துவிட்டு பின்னர் அதைக் களைந்து வெளியேறுவதற்குத்தான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

 

 

 

பதில்: அது உண்மையில்லை. வறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருநிலைப் படுத்தப்படும் விடயத்தில் அது உண்மைiயாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நல்ல நம்பிக்கையுடன் ஒரு மத வாழ்க்கையினுள் நுழைகிறார்கள். எந்த ஒரு பிள்ளையையும் பலவந்தமாக அதன் தாயிடமிருந்து பறித்து திருநிலைப் படுத்துவதில்லை, பலம் பிரயோகித்து அவர்களுக்கு காவி அணிவிக்க முடியாது.

 

 
இந்த நாட்டில் பௌத்த துறவிகளுக்கு பெரும் எண்ணிக்கையிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பலர் மனிதர்களாக நல்வழிப் படுத்தப் பட்டதுடன் தங்கள் அந்தஸ்தையும் அடைந்துள்ளார்கள் அதற்காக துறவறத்துக்கு நன்றி செலுத்த வேண்டும். காவியுடையை களைந்து அதைவிட்டு வெளியேறுவதில் பிரச்சனையில்லை.

 

 

 
பிக்குகளிடம் நல்ல குணங்களை ஆழமாகப் பதியவைத்தால் அவர்கள் மானிடர்களுக்கு உதாரணமாகவும் அதேசமயம் நல்ல உபாசகர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இன்று அதை எங்களால் காணமுடியவில்லை. அதன் அர்த்தம் பிக்குமார் கல்வி நெருக்கடியில் உள்ளது என்பதாகும்.

 

 

கேள்வி: புத்தசாசனத்தில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
பதில்: எது புத்தசாசனம்? அது சிக்கல் நிறைந்தது. சிலர் புத்தசாசனம் Buddisht Monks-1என்றால் பெரிய கோவில்கள் என்று எண்ணுகிறார்கள். ஆனால் புத்தசாசனம் என்பது ஒரு வாழ்க்கைப் பாணி. அது ஒருவகை வாழும் வழி. இப்போது அதைப்போன்ற எதுவும் இல்லை. அது சீரழிந்து போயுள்ளது.

 

 

 
உதாரணத்துக்கு நாம் விவசாயத்தை எடுத்துக்கொண்டால் ,விவசாயிகளின் கையினால் பெரும்பாலான கொலைகள் இந்த நாட்டில்; நடைபெறுகின்றன. பூச்சிகளை பெருமளவில் கொல்வதற்கு விவசாயிகள் கிருமிநாசினிகளை பயன்படுத்துகிறார்கள். இந்த நாட்டில் கோழிப் பண்ணையை நாங்கள் ஊக்குவிக்கக் கூடாது. ஸ்ரீலங்கா ஏராளமான தாவரங்கள் நிறைந்துள்ள ஒரு நாடு. நான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கவில்லை.

 

 

 

புத்தசாசனம், பிக்குகளுக்கு மட்டும் உரியது அல்ல, பிக்குணிமார்கள், உபாசகர்கள், மற்றும் ஆண்கள் பெண்கள் ஆகிய அனைவருக்குமே அதில் பங்குண்டு. இந்த நான்கு குழுக்களும் ஒழுங்காக இருந்தால் மட்டுமே புத்தசாசனத்தை பாதுகாக்க முடியும், பௌத்தர்களாக பிறந்துவிட்ட எளிய இருப்பினால் மட்டும் அது சாத்தியமாகாது. பெரிய கோவில்களை கட்டியெழுப்புவதனால் மட்டும் புத்தசாசனத்தை மேலுயுயர்த்த முடியாது.

 

 

 
பௌத்த பழக்கங்கள் மற்றும் கொள்கைகள் என்பனவற்றை சமூகத்துக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பௌத்தர்கள் பஞ்சசீலக் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.குடிப்பழக்கம் மற்றும் சூதாட்டம் என்பன சமூகத்தில் பரவுவதை பௌத்தம் பாதுகாக்காது. இந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பௌத்தம் இல்லையென்றே நாங்கள் சொல்ல வேண்டும்.

 

 

 

கேள்வி: பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதனால் அவர்கள் மீதுள்ள சமூக மரியாதை குறைந்துவிட்டது என்று நான் தெரிவித்தால் நீங்கள் அதற்கு என்ன சொல்வீர்கள்?

 

 

 

பதில்: சமூக பழக்க வழக்கங்களில் குறைபாடு உள்ளபடியால் சமூக மதிப்பு குறைந்து விட்டது. கட்சி அரசியல் துறவறத்துக்கு சேதாரத்தை உண்டுபண்ணுகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் முதலில் அரசியலில் நுழைந்தபோது இந்தக் கேள்வி எழுப்பப் பட்டது. இது சமூகத்தில் ஒரு சரிவை பிரதிபலிக்குமா என்று அவர்கள் கேட்டார்கள். பௌத்த கொடியை உயரப் பறக்கச் செய்யும் பௌத்த அலையை எழுப்பியதில் நாங்கள் முன்னோடிகள் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

 

 

 

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பைத்தியக்காரர்கள், மற்றும் அவர்களால் சாசனத்துக்கு சேதம் உண்டாகலாம். இதைப்பற்றி பேசுவதற்கு யாருமில்லை. அந்த நேரத்தில் நாங்கள் பயங்கரவாதப் பிரச்சினைக்கு தீர்வு கண்டோம். அது வெறும் அரசியலாக மட்டும் இருக்கவில்லை. தேசிய அரசியலில் அது ஒரு திருப்பமான கட்டம். அரசியலில் ஈடுபடும்போது தனிப்பட்ட ஆதாயத்துக்காக கட்சிகளாக பிளவுபடுவது தவறு.

 

 

 

சமூக இலட்சியங்களை பிக்குகள் அடிப்படையாக கொண்டிருந்தால் பிக்குகளின் அரசியலை என்னால் விமர்சிக்க முடியாது. வெறுமே அரசியலால் மட்டுமே பிக்குகள் சமூக மதிப்பை இழக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். உதாரணத்துக்கு ஸ்ரீலங்கா கம்யுனிஸ்ட் கட்சியை சோந்த உடகந்தவல சரணங்கார தேரர் ஒரு பகழ்பெற்ற அரசியல்வாதியாவார். ஹென்பிற்றகெதர ஞ}னசேக தேரர் அனைவராலும் நன்கு மதிக்கப் பெற்றிருந்தார்.

 

 

 

கேள்வி: அத்தகைய புகழ்பெற்ற பிக்குகள் இன்றுள்ளார்களா?
பதில்: நான் புகழ் பெறவில்லையா? முதன் முதலாக அரசியலில் இறங்கியபBuddish Monksோது நான் இன்றிருப்பதைப் போல பிரசித்தமாக இருக்கவில்லை. கடந்த எட்டு வருடங்களாக நான் பெற்றுள்ள சமூக மதிப்பில் சரிவு ஏற்படவில்லை. புகழின் ஒரு அடையாளமாகத்தான் ஊடகங்கள் என்னைக் காண்கின்றன. அதன் காரணமாகத்தான் நீங்கள்கூட என்னைக் காண வந்திருக்கிறீர்கள்.

 

 

 

ஒரு பிக்கு தனது அங்கியை விற்பனை செய்வது ஒரு சாராசரியான செயலாகும், ஆனால் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய தேவைகளுக்கு அழுத்தம் கொடுப்பது பிரச்சினையான ஒன்றல்ல. அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எதிர்காலத்திலும் கூட இதேபோல தேசிய கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் அரசியலில் ஈடுபடுவோம்.

 

 

 

அரசியல் கட்சிகளின் பின்னால் செல்வது பிக்குகளின் தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அது மட்டும்தான் ஒரே காரணம் என்று நான் கருதவில்லை. சில பிக்குகள் மிகவும் முதிர்ச்சியற்ற நிலையில் ஏன் நடந்து கொள்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பௌத்த பிக்குகளின் நல்ல ஒரு அமைப்பு இருக்குமானால் நாங்கள் ஜாதிக ஹெல உரிமயவில் அங்கத்தவர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் துரதிருஸ்டவசமாக அப்படியான எதுவும் இல்லை.

 

 

 

கேள்வி: கசினோக்களுக்கு எதிராக நீங்கள் பேசியிருந்தீர்கள், ஆனால் கசினோ நடவடிக்கை விலக்கிக் கொள்ளப்படவில்லை.

 
பதில்: நாங்கள் அதற்கு எதிராக கிளர்ச்சி செய்ததால் அது இடைநிறுத்தப் பட்டிருந்தது. 1988ல் இந்த களியாட்ட சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக யாரும் பேசவில்லை. நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒன்றை ஒழிப்பது மிகவும் கடினம். விளையாட்டு இந்த சமூகத்தில் நிறுவப்பட்ட ஒன்று. அதை திரும்ப பெறுவதற்கு நீண்ட காலம் பிரச்சாரம் செய்யவேண்டியிருக்கும். ஒரு நாடு பந்தயத்தின் வாயிலாக வளர்ச்சி அடைந்தது என்று ஏற்றுக்கொள்வதற்கு பௌத்த இலக்கியங்களில் சான்றுகள் எதுவுமில்லை.

 

 

 

கேள்வி: அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அது மோதலை முதன்மையாக கொண்டிருந்தால் அதை நீங்கள் பௌத்தத்துடன் எவ்வாறு பொருத்தப் படுத்துவீர்கள்?
பதில்: அரசியலில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதற்கு நாங்கள் அதனுடன் மத்தியஸ்தம் செய்யவேண்டுமே தவிர அதன் ஒரு பகுதியாகக்கூடாது. மதம் வாழ்க்கையின் ஆன்மீகப் பகுதியுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனச் சொல்லி அரசியலை கள்வர்களிடமும் போக்கிரிகளிடமும் மட்டுமே கையளிக்க வேண்டுமா? மதத்தின் மதிப்பை நாங்கள் அரசியலுக்கும் கொண்டுவர வேண்டும். அரசியல் ஒரு குழப்பத்தில் இருக்குமானால் அதை நன்றாக்குவதற்கு நாங்கள் இன்னமும் அதிகமாக அரசியலில் ஈடுபடவேண்டும்.

 

 

 

கேள்வி : அரசியலில் நீங்கள் ஈடுபட்டதினால் அரசியலை எவ்வளவு தூரத்துக்கு உங்களால் சுத்தம் செய்ய முடிந்தது?

 

 
பதில்: எங்களால் உடனடியாக விளைவுகள் எதையும் காணமுடியாமலிருக்கலாம், அனால் சமூகத்தில் நாங்கள் ஏராளமான கொள்கைகளை விதைத்துள்ளோம். உதாரணமாக போர் முடிவடைந்தது எங்களால்தான். மது மற்றும் புகைபிடித்தல் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது எங்களது தொடர்பினால்தான். மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிடாமல் மற்றும் மதுவை வழங்காமல் நான் 100,000 விருப்பு வாக்குகளைப் பெற்றேன். நாங்கள் முன்னுதாரணமாக உள்ளோம். நாங்கள் மாற்றத்தை உருவாக்குகிறோம். அது சிறியதாக இருந்தாலும் உற்பத்தி திறன் உள்ளதாக இருக்கிறது. அதை பிரதான மரபாக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.

 

 

 

கேள்வி: அது வெற்றி பெறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 
பதில்: நிச்சயமாக அது வெற்றி பெறும். இல்லையென்றால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. அரசியல்வாதிகள் சுத்தமான மனிதர்களாக இருக்கவேண்டும். அரசியல் ஊடாக நான் எந்த ஆதாயத்தையும் பெறவில்லை. நான் வெளிநாட்டில் ஒரு போதகராக மற்றும் தியான ஆசிரியராக இருந்திருக்கலாம். நான் ஒரு நல்ல போதகரும் மற்றும் ஒரு நல்ல தியான ஆசிரியனும் ஆவேன். ஓமலபே சோபித தேரரும்கூட அரசியலை விரும்பவில்லை. யாராவது இந்த பாத்திரத்தை வகிக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாக அவர் அரசியலில் ஈடபட்டு வருகிறார். யாராவது இந்தக் கடமையை என்னைவிடச் சிறப்பாகச் செய்வார்களானால் நான் அரசியலை விட்டு விலகிவிட முடியும்

 

 

 

கேள்வி: நேரடியாக அரசியலில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஆலோசகர்களாக இருப்பது பிக்குகளுக்கு நல்லது என்று நீங்கள் எண்ணவில்லையா?

 

 
பதில்: எந்த ஆட்சியாளரும் ஆலோசனையை ஏற்கத் தயாராக இல்லை, SL Monksஅவர்கள் பிக்குமார்களுக்கு செவி கொடுப்பதைப்போல் பாசாங்கு செய்கிறார்கள். நாங்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதின் மூலம் அதன் சமநிலையில் நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். சாதாரண மனிதர்கள் அதைச் செய்வதையே நாங்கள் விரும்புகிறோம்,ஆனால் முதகெலும்புள்ள மனிதர்களாக யாரும் இல்லை. அதனால்தான் எங்கள் புகழை பயங்கரவாதத்துக்கு எதிராக முதலீடு செய்யவேண்டி உள்ளது. சாதாரண மனிதர்களால் கட்டியெழுப்ப முடியாத உறுதியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்

கேள்வி: சம்பிக்க ரணவக்கவினால் வழி நடத்தப்படும் குழு உங்களுக்கு சூழ்ச்சி செய்கிறது என்று நீங்கள் எண்ணவில்லையா?

 

 
பதில்: இல்லை இந்த நாட்டுக்கு சம்பிக்கவை போன்ற ஒரு ஆழுமையை நாங்களும் உருவாக்கியுள்ளோம். அவர் மதத்தினால் அரசியலை உருவாக்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எங்களை அடக்கிவிட முடியாது நாங்கள் அதற்குச் சமனான அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ளோம். அவர்களால் எங்களை சூழ்ச்சித் திறத்துடன் கையாள முடியாது. நாங்கள் சாதாரண மனிதர்களையே தலைவர்களாக உருவாக்கியுள்ளோம்.

 

 

 

கேள்வி : பாராளுமன்றத்தில் பௌத்த பிக்குகள் அவமரியாதை செய்யப்படவில்லையா? உதாரணத்துக்கு கொலன்னாவ சுமங்கல தேரர் சந்தித்த சோதனைகளைப் போன்று.
பதில்: மற்றவர்கள் செய்தது போல, நாங்கள் எங்கள் மதிப்பை இழக்கவில்லை. பல காரணங்களுக்காக சுமங்கல தேரர் வெளியேறினார். அவற்றில் சில இந்த அரசியல் முறையால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அனைத்திலும் பொதுவாக அவர்களின் தொடர்பு சமூக விழிப்புணர்வின் ஆரம்பமாக இருந்தது. அதையே நாங்களும் பராமரித்து வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,ஆனால் அதில் நாங்கள் தோற்றுவிட்டோம்.

 

 

 

கேள்வி: பிக்குகள் சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பம் செய்வது பற்றிய உங்கள் கருத்து என்ன?

 

 
பதில்: இப்போது வாகனங்கள் உள்ளதால் அது நல்லது ஒன்று ஒருவர் வாதாடலாம். ஆனால் கடந்த காலங்களில் மாட்டு வண்டிகள் இருந்தன மற்றும் பௌத்த பிக்குகள் மாட்டு வண்டிகளை ஓட்டியதற்கு சரித்திரச் சான்றுகள் எதுவும் கிடையாது. அதன் விளைவுகளைப் பற்றி நாங்கள் யோசிக்க வேண்டும்.

 

 

 

ஒரு பௌத்த பிக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றால் அவர் போக்கு வரத்து சட்டங்களுக்கு கட்டுப்பட்டவராவார், மற்றும் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப் படவேண்டியவராகிறார். அது ஒரு பிக்குவின் தோற்றத்தை சேதப் படுத்துகிறது. எங்களது சாசனம் ஒரு உறுதியான தலைமையின் கீழோ அல்லது ஒரு திட்டத்தின் கீழோ இல்லை. பிக்கு சமூகத்தின் ஒழுக்கம் இதனால் தளர்வுறுகிறது. இந்தக் கட்டத்தில் பிக்குகளுக்கு ஓட்டுனர் உரிமம் அறிமுகப்படுத்தப் பட்டால் அது தீய விளைவுகளைத் தரலாம். அது பிக்குமார் சமூகத்தை சிக்கலுக்குள் மாட்டிவிடும்.

 

 

 

கேள்வி: பிக்குகள் அரசியலில் ஈடுபடுவதுடன் ஆடம்பர மாளிகைகளில் வசிக்கும்போது, சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் சிலர் வாதிடலாம்.
பதில்: அரசியல் தேசிய நலன் சார்ந்ததும் மற்றும் சமூக கலாச்சாரப் பிரச்சினையும் ஆகும், ஆனால் சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு தனிப்பட்ட விவகாரம் ஆகும். பிக்குகள் சமூகத்தில் இது தொடர்பாக ஒரு ஒருமித்த கருத்து இருக்கவேண்டும். அது இல்லாவிட்டால் சாரதி அனுமதிப்பத்திரம் குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஒரு பிக்கு ஒரு முச்சக்கர வண்டியை ஓட்டுவாரா இல்லையா என்பது யாருக்குத் தெரியும்.

 

 

 

கேள்வி: ஒரு ‘பண’ ஓதுவதற்கு சில பிக்குகள் கிட்டத்தட்ட 25.000 ரூபா வரை கட்டணம் அறவிடுகிறார்கள். இல்லையென்றால் அவர்கள் வருவதில்லை. ஏன் இந்த நிலமை?
பதில்: நான் ஒருபோதும் ஒரு அட்டபிரிக்கரவை ஏற்றுக் கொள்வதில்லை. பல பிரசித்தமான பிக்குகளும் அப்படித்தான். நீங்கள் சொன்னபடி நடக்கும் பிக்குகளும் இருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால். ஒரு பண ஓதுவதற்கு மக்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்.

 

 

பௌத்ததுறவிகள் தவறுகள் செய்வதற்கு நீங்கள் ஏன் உதவி செய்யவேணடும்? பிக்குகள் சமூகம் முற்றிலும் சுத்தமான ஒரு சமூகம் கிடையாது. அதில் பல்வேறு வகையானவர்கள் உள்ளனர். மேலும் அது சமூகத்தில் எதிரொலிக்கிறது. அது தனிமையான ஒரு அமைப்பு அல்ல. மக்கள் பிக்குவுக்கு 25,000 ருபாவை கொடுத்துவிட்டு. அவர் சென்றவுடனேயே அவரை தூற்றவும் செய்கிறார்கள். அப்படி பணம் கொடுப்பது தவறு. அவரது போக்குவரத்து செலவுக்காக கொடுத்தால் ஒருவேளை அது சரியாக இருக்கலாம். இதை ஒரு சமூகப் பிரச்சினை என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

 

 

 

கேள்வி: சில கோவில்களில் தானம் கொடுக்கும் அழைப்புகளை ஒப்புக்கொள்ளும்போது, அதற்காக ஒரு உணவுப் பட்டியலையும் வழங்குவதாக மக்கள் குற்றம் சொல்கிறார்கள்
பதில்: உண்மையில் மக்கள் தரும் உணவுப் பட்டியல் எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் அளவுக்கு மீறி வழங்குகிறார்கள். நாங்கள் வேண்டாம் நன்றி என்று சொல்வதை சிங்கள மக்கள் மரபு ரீதியாக கவனிப்பதில்லை. ஒரு பிக்கு தானம் தரும்படி கேட்கமுடியாது. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படுவது எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண:டும். நீங்கள் சொல்வதுபடி யாராவது நடந்திருந்தால் அது குற்றம்.

 

 

 

கேள்வி:; துருப்பிடிப்பதன் காரணமாக இரும்பு அழிவதுபோல புத்த சாசனத்துக்கு அதற்குள்ளேயே அழிவு ஏற்படும் என்று புத்தர் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்றைய நாட்களில் ஏனைய மதங்களிடமிருந்து புத்த சாசனத்தைக் காப்பாற்றும்படி குரல் எழுகிறதே.
பதில்: மதம் பல காரணங்களினால் அழிவடையலாம். ஆட்சியாளர்கள் அல்லது அதை உபாசிப்பவர்களின் மதிப்புகள் சரிவடையும்போது சாசனமும் அழியலாம்.

 

 

பிக்குகளாலும் அது நடக்கலாம். இது ஒரு மரத்தின் தண்டு மற்றும் பட்டை என்பனவற்றைப் போன்றது. ஆனால் ஒரு உண்மையான பிக்கு எது நடந்தாலும் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டார். அப்படியான ஒரு அழிவு நேர்ந்தால். சாசனத்தை மேலுயுயர்த்துவதற்காக அதற்குள்ளிருந்தே ஒரு பிக்குமார் கூட்டம் தோன்றக்கூடும். கண்டியன் காலத்தில் சரணங்கார தேரர் அந்தப் பணியை நிறைவேற்றினார். இன்றும்கூட போராட்டத்துக்கு தலமை தாங்க பல பிக்குகள் உள்ளனர்.

 

 

கேள்வி: புத்த சாசனத்துக்கு உள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் என்ன?
பதில்: பிக்குகளின் தலைமையை ஏற்பது மிகவும் முக்கியமான ஒன்று. பொருத்தமான தலைமை இல்லாததே புத்த சாசனத்தின் அழிவிற்கான ஒரு காரணம். முறையான நிருவாகம்கூட அங்கில்லை

 

 

கேள்வி: புத்தரால் போதிக்கப்பட்ட பௌத்தத்தைதான் இன்று ஸ்ரீலங்காவில் நாங்கள் கொண்டுள்ளோமா?

 
பதில்: ஸ்ரீலங்காவில் புத்தரால் போதிக்கப்பட்ட பௌத்தத்தை கட்டியெழுப்ப சிலபேர்கள் முயற்சி செய்கிறார்கள். பௌத்தம் ஒரு வாழ்க்கை வழி, அது பிக்குகளுக்கு மட்டும்தான் என கட்டுப்படுத்த முடியாது. சமூகத்திலும் அதேபோல இருக்க வேண்டும். ஆனால் சமூகத்தில் எங்களால் அதைக் காண முடியவில்லை, மற்றும் புத்த பிக்குகள் மத்தியிலும் அது குறைவாக உள்ளதை நாங்கள் காண்கிறோம்.

 

 

கேள்வி கடந்த காலத்திலிருந்த ஆட்சியாளர்கள் செய்ததுபோல.தற்போதைய ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தை தங்கள் ஆதாயத்துக்காக கையாள்கிறார்களா?

 
பதில்: அது ஒரு விதி. அதேபோல பிக்குகளும் மத இலட்சியங்களுக்காக ஆட்சியாளர்களால் கையாளப் படுகிறார்கள். உதாரணமாக துட்ட கைமுனு அரசன், அரசாள்வதற்காக பிக்குகளை ஒருபொழுதும் கையாளவில்லை, ஆனால் பிக்குகள் அவரை முன்னணிக்கு கொண்டுவந்தார்கள். அபோல மன்னன் முகலனும் காசியப்ப மன்னனை வெளியேற்ற மகா விகாரைப் பிக்குகளால் ஆதரிக்கப்பட்டான் இது சீரானது அல்ல. சாதுரியமாகச் செயற்படுவது இரண்டு முனைகளிலும் நடக்கலாம்.

 

 

கேள்வி: இது ஒழுக்கம் கெட்ட ஒரு கூட்டணி அல்லவா?
பதில்: ஆம். இப்படியான நிகழ்வுகள் நடைபெறலாம். இது 1956ல் புத்தரக்கித்தர பிரதமர் எஸ்.டபின்யு..ஆர்.டி பண்டாரநாயக்காவை கொலை செய்தததை போன்ற ஒரு சம்பவம்தான்.

 

 

கேள்வி: அது திரும்பவும் நடக்குமா?
பதில்: அதற்கான சாத்தியங்கள் உள்ளன.

 
There is no Buddhism in the countryAthuraliye Rathana Thera in an interview with Ceylon Today admits that the lifestyle of Buddhist monks had changed with time and gives the reasons for monks taking to politics.By Niranjala Ariyawansha
Q:
Has the bhikkhu’s life pattern changed?

A: Yes, the lives of bhikkhus have also changed like that of the laymen. We used to wake up early and sleep early as kids, but now we go to bed late and wake up a little late. The reason is the change in the life of the people. We return to temples late. People are too busy now and they come to hear sermons only in the night. Unlike in the past, when the people observed sil on four poya days of the month, the people have now adjusted to being religious on Sundays. The changes in the life patterns of the laymen have an effect on the monks too. It is the same, as the collapse of society is reflected in the monk community. Today, Buddhist monks have become professionals. Some have turned towards astrology and other supernatural affairs and charge money for them. The monk’s life also has become commercialized.

Q:


Today, the majority of children who get ordained are from poor families. They complete their education and give up their robes to go and help their families. How do you analyze this situation?
A: It was common in the past also. The monks who were ordained as kids disrobed later then, too. Everybody ordained with us also did not continue. But today, that trend has increased. There are many reasons for that. One side is social. The material persuasions are high now. The other reason is that there is no proper spiritual education. There is no fault in bhikkhus obtaining higher education. But there is no proper bhikkhu education today. Today’s general education is similar to writing books without education. The facts learned are not practiced in the present day education system which is aimed at examinations. It is a crisis situation. Buddhism is a practical religion. Bhikkhu education is training under a better spiritual leader. We have completely changed there.

Q: Do you mean that people ordain merely to enjoy the privileges as a monk and to disrobe later?
A: It is not true. It is true that the children of poor families are ordain.
But they enter into the religious
life in good faith. No child can be forcibly taken away from its loving mother and ordained. In the same way, they cannot be kept robed by force. Buddhist monks are open to a large number of privileges in this country. Many, who improved as human beings, achieved their status thanks to the monkhood.
Disrobing is not a problem. If we have inculcated good values in the monks, they will be exemplary human
beings as laymen also. But we can’t see it today. That means there is a crisis in bhikkhu education.

 

 

Q:
Do you agree that there is deterioration in the Buddha Sasanaya?
A: What is the Buddha Sasanaya? It is problematic. Some think that Buddha Sasanaya is big temples. But Buddha Sasanaya is a lifestyle. It is a way of living. There is nothing like that now. It has deteriorated. If we take farming, as an example, most of the killings take place in this country by the hands of the farmers. Farmers use pesticides to kill insects on a mass scale. We should not promote poultry in this country. Sri Lanka is a land with a lot of vegetation.

 
I am not proposing extremism. Buddha Sasanaya is not only the monks. Female monks, laymen, both male and female, are parts of it. Buddha Sasanaya can be protected only if these four groups are disciplined and not by the simple existence of born Buddhists. Buddha Sasanaya cannot be upheld by mere building of big temples. The society must be inculcated with Buddhist attitudes and principles. Buddhists must keep with the five precepts. Buddhism may not be safeguarded if alcoholism and betting is spread in the society. In this context, we have to say there is no Buddhism in this country.

Q:
What would you say if I suggest that social respect for the Buddhist monks have diminished due to their political engagement?
A: Social respect has gone down due to shortage in social behaviour. I admit that party politics causes damage to monkhood. The question was raised when we first entered politics. They asked if this reflected a decline in society. I would like to say that we were the pioneers of this Buddhist wave that hoists the Buddhist flag high. The rulers of this country were crazy and the Sasanaya could be destroyed by them. There was nobody to talk about this. At that moment, we addressed the problem of terrorism. It was not mere politics. It was a juncture in national politics. Engaging in politics divided into parties for personal gains is wrong. I can’t criticize bhikkhu’s politics if they are based on social goals. I don’t think bhikkhus lose social respect merely because of politics. For instance, Udakandawela Saranankara Thera of the Communist Party of Sri Lanka was a renowned politician. Henpitagedara Gnanaseeha Thera was well respected.

Q:Are there such renowned monks today?
A: Am I not renowned? When I first entered politics, I was not famous like today. The social respect I gained has not declined within the past eight years. The media take me as a symbol of popularity. You also come to meet me because of it.
A bhikkhu marketing the robe for profit is a mean act, but being elected to the parliament to press for national needs is not a problem. We proved it. In future as well, we need to do politics based on a national policy. Going after political parties damages the image of the bhikkhu. I don’t mean that it is the only reason. I can’t know why some monks behave very immaturely. If there is a good organization of Buddhist monks, we do not need to be members of the Jathika Hela Urumaya, but unfortunately there is nothing like that.

Q: You spoke against casinos but the Casino Act was not withdrawn.
A: It was suspended since we agitated against it. When the Gaming Act was introduced in 1988, nobody spoke against it. It is very difficult to abolish something which was in practice for a long time. Gaming is established in this society. We need a far reaching campaign to turn it back. There is no evidence in Buddhist literature about admitting that a country may be developed through betting.

Q:
How do you match Buddhism, which is based on non-violence, with politics, which primarily means conflict?
A: We need to mediate in politics to clear the mess in it and not to be part of the mess. Should we hand over politics to thieves and loiterers stating that religion is limited to the spiritual side of the life? We need to bring the values of religion to politics. We need to engage in politics more if politics is in mess so that we can make it better.

Q: How far has your engagement in politics been able to clean up politics?
A: We may not see immediate results, but we have set forth a lot of ideals in the society. For example, the war ended because of us. The Liquor and Tobacco Act was introduced due to our engagement. I gained 100,000 preferential votes without spending millions of rupees and offering liquor. We were exemplary. We created change. It is small but productive. We try to make it the main tradition.

 

Q: Do you think it will be successful?
A: Definitely, it must be so. Otherwise, this country will have no future. Politicians must be clean people. I do not gain any benefit through politics. I could have been a preacher in a foreign country. I am a very good preacher and a teacher of meditation. Omalpe Sobhitha Thera also does not like politics. He engages in politic symbolically since somebody must play this role. I can quit if somebody performs this duty better than me.

 

Q: Don’t you think it is good for monks to be advisers instead of involving directly in politics?
A: No ruler is ready to take advice and they just pretend to listen to bhikkhus. We changed the equilibrium in politics as we were elected to the Parliament. We prefer if the laymen did it but there were no laymen with backbones then. That is why we had to invest our popularity against terrorism. We created the strength the laymen could not build up.

 

Q: Don’t you think that the group led by Champika Ranawaka manipulated you?
A: No. We created a personality like Champika for this country. He was formed politically by the religion. We created an identical political movement which may not liquidate in the Sri Lanka Freedom Party. They did not manipulate us. We created laymen leaders.

Q: Weren’t the Buddhist monks disrespected in the Parliament? For instance, like in the ordeal Kolonnawe Sumangala Thera faced.
A: We did not lose respect, but those who did it. Sumangala Thera quit due to many reasons. Some cannot endure this political system. All in all, their involvement was the beginning of social awakening. It would have been good if we could have maintained it but we failed.

 

Q: What is your opinion about monks applying for driving licence?
A: One can argue it is good since vehicles are new. But there were bullock carts in the past and we do not have historical evidence that the Buddhist monks had driven the bullock carts. We have to think of the result. When a Buddhist monk obtains a driving licence, he is subjected to traffic law and the offenders will have to be punished. That would damage the image of the bhikkhu.
Our Sasanaya is not under a solid leadership or a programme. The discipline in the bhikkhu society is loosening. If driving licences are introduced to monks at this moment, it may have bad effects. It will put the bhikkhu society in trouble.

Q:One may argue that the driving licence may not be an issue in the context of monks engaging in politics and living in luxury bungalows.
A: Politics is a national interest and a socio- cultural issue, but driving licence is a personal affair. There must be a consensus in the monk community regarding this. Without it, the driving licence may cause problems. Who knows if a monk can drive a three wheeler?

Q:Some monks charge around Rs 25,000 for a Bana preaching. They do not come otherwise. What is this situation?
A: I never accept an Atapirikara. Many famous monks are like that. There may be monks who act in the way you said. The problem is why do the people pay that money for a Bana preaching. Why do you help the Buddhist monks to commit errors? The monk community is not an ultimately pure one. There are various kinds of people in it and it also reflects on the society. It is not a lonely entity. People pay Rs 25,000 and blame the monk as soon as he leaves. It is wrong to give money like that. It may be alright if it is for transport. You must understand this as a social issue.

 

Q: People allege that some temples provide a menu when they accept invitations for almsgiving.
A: Actually, the people’s menu gives us trouble. They offer too much. Sinhala people traditionally do not listen when we say ‘no thanks.’ A bhikkhu cannot ask for offerings but they have to accept anything offered. If anyone acts like that, it is an offence.

Q: The Buddha said that the Buddha Sasanaya might decay from within like iron rots due to rust. But these days there is voice to safeguard Buddhism from the other religions.
A: The religion may decay due to many reasons. Sasanaya may decay with the decline of the values of the rulers or the laymen. It may happen due to bhikkhus too. This is like the bark and the trunk. But a real bhikkhu never falls despite whatever happens. A group of bhikkhus may rise from the Sasanaya itself to uplift it when such deterioration takes place. In the Kandyan era, Saranankara Thera performed that duty. Today also, there are monks that lead the struggle.

 

Q: What is the biggest threat to the Buddha Sasanaya?
A: The leadership of monks is crucial. One reason for the deterioration of the Buddha Sasanaya is the lack of proper leadership. There is no proper administration also.

Q: Do we have the Buddhism preached by The Buddha in Sri Lanka now?
A: Some persons try to build the Buddhism preached by The Buddha in Sri Lanka. Buddhism is a way of life not limited to monks alone. It should be in the society as well. But we do not have it in the society and we lack it among Buddhist monks too.

 

Q: Do the rulers manipulate Buddhism for their benefit like the rulers in the past did?
A: It is true. In the same way, the bhikkhus also manipulated rulers for religious aims. For example, King Dutugemunu never manipulated bhikkhus for the kingship but monks brought him forward. In the same way, King Mugalan was also supported by bhikkhus of Maha Vihara to oust King Kashyapa. This is not linear. Manipulation can happen at both ends.

 

Q: Isn’t this an unholy alliance?
A: Yes, such things can happen. It was the same in 1956 as well, in which year Buddharakkhitha assassinated Prime Minister S.W.R.D. Bandaranaike.

Q:
Would that be repeated?
A: There is a possibility.

Web Design by Srilanka Muslims Web Team