பௌத்த சக்திகளின் ஆதிக்கமும் தெவனகல முஸ்லிம்களின் இன்றைய நிலையும் - Sri Lanka Muslim

பௌத்த சக்திகளின் ஆதிக்கமும் தெவனகல முஸ்லிம்களின் இன்றைய நிலையும்

Contributors

 

 

– அபு அஹமத் –

முஸ்லிம்கள் தெவனகலை பிரதேசத்தில் பலவந்தமாக குடியேறியுள்ளார்கள் என்ற போலியான கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.

கேகாலை மாவட்டத்தில் மலையகத்தின் தலைவாயிலாக அமைந்துள்ள மாவனல்லை நகரில் இருந்து ஹெம்மாத்தகமை வீதியின் ஊடாக சுமார்  6 கிலோமீட்டர் தூரத்தில் பயனிக்ககையில் பாதையின் வலது புறமாக பாரிய ஆமை வடிவையொத்த இரண்டு மலை தொகுதிகள் உள்ளன. இதுவே தெவனகலை என்று அழைக்கப்படுகின்றது. இன்று இக்கற்பாறையை சூழவுள்ள கிராமங்களாக மாலியந்த, ருவன்தெனிய, உடன்பமுனுவ, கடுகஹாவத்த, கெகிரிகொட, தெனவகல, உயன்வத்த போன்ற முஸ்லிம்கள் அதிகமாக செரிந்து அன்னிய மக்களோடு ஒற்றுமையாக வாழ்கின்ற பிரதேசங்கள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

வரலாற்று பின்னனியில் இக்கற்பாறைக்கு தெவனகலை என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதுக்கு பல புராதன கதைகள் பலவிதமாக சான்று பகர்கின்ற நிலையில் இக்குன்றின் ஆரம்ப உரிமை தொடர்பாக கிடைக்கப்பெருகின்ற முதலாவது ஆதாரம் இக்கட்பாறையில் செதுக்கப்பட்டுள்ள ‘செல்லிபி’ என்று அழைக்கப்படுகின்ற கல்வெட்டுகளே ஆகும்.

அதன் அடிப்படையில் மகா பராக்கிரபாகு மன்னனுக்கும் பர்மா (மியன்மார்) தேசத்திற்கு இடையில் நடைபெற்ற யுத்தமொன்றிற்கு தலைமைதாங்கி அப்போரில் வெற்றிபெற்று திரும்பிய தளபதி ‘கித்சிரி நகரகிரி’ என்பவருக்கு மன்னனால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இக்கற்குன்றும் இதனைச்சூழவுள்ள நிலம், வயல் பகுதிகளை கொண்ட – வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கின்ற ‘கித்சிரி பவ்வ’ என்ற பகுதியே தெவனகலையை சூழவுள்ள பகுதிகளாக வழங்கப்படுகின்ற. அதிலும் குறிப்பாக அவை உடபமுனுவ, பல்லேபமுனுவ ஆகிய இடங்களாகதான் இருக்க முடியும் என்றும் – ‘பமினீம’ (வருதல் என்பதை சிங்கள மொழி சொல்) என்ற சொல்லில் இருந்து பமுனுவ அமையப்பெற்றதை வைத்து ஆய்வாளர்கள் மேல் உள்ள கருத்ததுக்களை முன்வைக்கின்றனர்.

இக்குறிப்புக்கள் இவ்வாறு இருக்க இங்கு ஏற்பட்டிருக்கும் குடியிறுப்புக்கள் தொடர்பாக நாம் ஆராயவும் இன்னும் சில வரலாற்று பின்னனிகளை அறியவேண்டியிருக்கின்றது.

சிங்கள இனம் ஏன் பௌத்த மதம் கூட இலங்கை திருநாட்டில் இருந்து அழிந்து போகும் என்று அஞ்சும் அழவிற்கும் உக்கிரமான போர்துக்கேயரின் கன்டி இராச்சியத்தின்மீதான படையெடுப்பினை வெற்றிக்கொண்ட ‘கோணப்பு பண்டார’ என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட மன்னன் முதலாம் விமலதர்ம சூரியனை சிங்கள மக்களிடத்தில் பிரபல்யம் அடையச்செய்து அம்மக்களுக்கு தலைமை வகிக்க வைத்த பெருமை அக்காலப்பகுதியில் தெவனகலை விகாரையில் வாசம் செய்ய வந்த மக்கள் மதிப்பையும் மன்னர் மனதையும் வென்ற ‘தெவனகல ரத்னாலங்கரா’ (ஏநn. னுநறயயெபயடய சுயவாயெடயபெயமயசய) என்பரையே சாரும். இந்த காரணங்களின் பின்னனியில்தான் இன்றுள்ள ருவன்தனிய என்ற பகுதியும் அதனைச்சூவுள்ள சில பிரதேசங்களும் விகரைக்கு மன்னனால் அன்பளிப்பு செய்யப்பட்டன. இவ்விகாரையில் காணப்பட்ட புராதண திரிபீடக நூல்களை பாதுகாத்து வைப்பதற்காக இரத்னாலங்கா  தேரரினால் ஒரு கருங்கல் கட்டிடம் இக்ககாலபகுதியில் நிர்மாணிக்கபட்டது. அதன் சிதைவுகளை இன்றும் அப்பகுதியில் நாம் காணக்கூடியதாகவுள்ளன.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இக்கற்பாறையில் செதுக்கபட்ட ‘செல்லிபி’ மற்றும் இக்கருங்கல் கட்டிடம் ஆகிய இரண்டையும் கொண்டுமே தெவனகல இக்குன்று புராதன இடமாக கணிக்கப்படுகின்றது.

புவனேகுபாகு மன்னின் தந்தையான இரண்டாம் பராக்கிரபாகு மன்னனுக்கு தொண்டையில் ஏற்பட்ட தீராத நோயை குணப்படுத்தும் நோக்கில் அவனது வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவின் டில்லி சுல்தான் அவர்களின் ஆணையி;ல பேரில் கி. பி. 1165 இல் மொறோகோ கலிபாவான அபூ யாகூப் இப்னு யூசூப் அவர்களின் பிரதான மருத்துவர் ஆகவும் செயலாளர் ஆகவும் கௌன்சிலர் ஆகவும் விளங்கிய இஸ்லாமிய இஸ்பெயினின் மவாஹத் கோத்திரத்தை சேர்ந்த ஹகீம் என்ற பகழ்பெற்ற அரசசபை மருத்துவரிடம் மருத்து கலையை கற்ற அபூபக்கர் முஹம்மத் இப்னு அப்துல் நலிக் இப்னு துபையில் அல் மதனி இந்தியாவின் சிந்து மாகாணத்தில் உள்ள கோப் எனும் நகரில் இருந்து இலங்கைக்கு வந்தார் இதனாலேயே இவரது சந்ததிகள் பிற்காலத்தில் ‘கோபாலச் சோனகர்’ என்று அழைக்கப்பட்டனர்.

இவர்களது வழிதோன்றலில் ஒருவர் கி.பி. 1597 இல் மன்னன் முதலாம் விமலதர்ம சூரியனின் கரையோரப் பாதுகாப்பு படையின் ஜெனரலாகவும், கட்டளையிடும் தளபதியாகவும், வைத்தியராகவும் செயற்பட்டார் என்பதற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளன. கண்டி இராச்சியத்தின் வெற்றிக்குப்பின் கரையோபரப்பகுதிகளில் வாழ்ந்து வந்த இவர்கள் மலைநாட்டின் பல்வேறு இடங்களில் வந்து குடியேறினர். இவர்களது பரம்பரையினரே 1796 முதல் 1815 வரை மன்னர்களது அரண்மனையில் வைத்தியர்களாக திகழ்ந்தார்கள். அவர்களின் உண்மைத்தன்மை, வைத்திய திறமை என்பவற்றிற்காக அரசரினால் ‘வைத்திய திலக இராஜ கருனா கோபால முதலி’ என்ற நாமமும் அரச மருந்தகத்தின் தலைமை பதவியாகிய ‘பேத்கே முகந்திரம்’ பதவியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன. அது மட்டுமல்லாது ‘நிந்த கம’ என்ற அடிப்படையில் இம்மக்களது குடியிறுப்புகளுக்காக கண்டி இராச்சியத்தின் பல பகுதிகளை இவ்வரசன் அன்பழிப்பாக வழங்கினான்.

இவ்வாறு நிந்த கம என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட பகுதிகளில் குடியேறியவரர்களே உயன்வத்த, தெவனகல முஸ்லிம் மக்களின் பூர்வீகத்துக்கான சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிடப்பட்டது. இதற்hகன ஆதாரங்கள் கி. பி. 1760 இல் அரசரால் வழங்கப்பட்ட ‘சன்னஸ்ஸ’ பத்திரங்கள் சில இன்றும் இம்மக்கள் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. ஆக உயன் வத்த, தெவனகல முஸ்லிம்களின் பரம்பல் பிரதான மூன்று பெயர்கொண்ட குடும்பங்களால் ஏற்பட்டுள்ளன என்பற்கான ஆதாரங்கள் உள்ளன.

அக்குடும்பங்களாவன

1. கலுதாமட கெதர குடும்பம்.

2. கம்பளை வீட்டார் (லெப்பை வீட்டார்) வைத்திய இரத்ன முதலி குடும்பம்.

3. கொடுவ குடும்பம்.

கலுதாமட கெதர குடும்பம்

உயன்வத்தையில் இன்று வரை காணக் கிடைக்கின்றவற்றில் முஸ்லிம்களின் பழையது எனக் கருதக்கூடிய காணி உறுதியொன்றில் அது எழுதப்பட்ட காலம் 1872 மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஹபுகஸ் – தலாவ எனும் கிராமத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களின் பூர்வீகத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது இவர்களின் குடிம்பமே இன்று இப்பகுதிகளில் மிகப்பெரிய கிளைகளைக் கொண்ட குடும்பமாகவுள்ளது. இவர்கள் கலுதாமட கெதர எனும் பரம்பரை பெயர்கொண்டு வழங்கப்படுவதுடன் தெவனகல கடுகாவத்த, கொஹில ஆகிய பகுதிகளில் ஆரம்பித்து உயன்வத்தையின் மத்திய பகுதிளை அன்மிக்கும் வரை பரந்து விரிந்து காணப்படுகின்றன.

உயனன்வத்தை மக்கள் கண்டி மகா தேவாலயத்திலும் அலுத்நுவர தேவாலயத்திலும் பணியாற்றிய முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட முதல் நிலம் இங்கு காணப்படுவதால் மகா தேவாலயத்தை நிர்மாணித்த கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் ஆட்சிக் காலம் 1747 – 1782 என்பதாலும் இக்கிராமத்தில் மக்களது நிரந்தர குடியிறுப்புகள் தோன்றிய காலப்பகுதி 1815 க்கு முந்தியதாகவும் 1747க்குப் பிந்தியதாகவும் இருக்க வேண்டும் என்பது தெளிவு.

கம்பளை வீட்டார் (லெப்பை வீட்டார்) வைத்திய இரத்ன முதலி குடும்பம்.

ராஜாதிராஜசிங்க மன்னனால் (கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் சகோதரன் 1782-1796) கி. பி. 1782 விடர மாத 11ம் திகதி வெள்ளிக்கிழமை முகந்திரம் பட்டம் கிடைத்த முதல் வைத்தியர் கருணாசிங்ஹ வைத்தியரத்ன திலகம் அப்துல் அஸீஸஜ எனும் நூலில் அதன் ஆசிரியர் கன்ஸூல் உலூம் அல்ஹாஜ் எஸ். எம். ஏ. ஹஸன் அவர்கள் குறிப்பிடுகிறார். இவர் இதனை இங்கு குறிப்பிடக் காரணம் என்னவெனில் யூசுப் லெப்பை வைத்தியர் அப்துல் அஸீஸ் வைத்தியரின் தாயாராண ஆமினா உம்மாவின் தந்தை வழி வந்த இரண்டாவது பாட்டனார் ஆவார். இந்த யூசுப் லெப்பை வைத்தியரின் புதல்வர்களிலொருவரான ஹபீபு லெப்பையின் புதல்வன் அஹமது லெப்பைக்கும், கலாரட கெதர குப்பத்தம்பி மிஸ்கீன் பாவா என்பருக்கும் அவர்கள் கண்டி மகா தேவாலயத்துக்கும் அளுத்நுவர தேவாலயத்துக்கும் ஆற்றிய சேவைகளுக்காக ஆற்றிய சேவைகளுக்காக ராஜாதிராஜசிங்க மன்னன் கல்கடகோரளை கெகிரிகொட கிராமத்தில் 17 ஏக்கர் விஸ்தீரணமுள்ள ‘கொஹொவிலே’ வத்த எனும் தோட்டத்தை பரவணியாக வழங்கி கௌரவித்தான். இதன்படி இநத காணிகள் கி. பி. 1782ல் வழங்கப்பட்டிருப்பது புலனாகின்றது. இவை எமது கிராமத்திஜன் ஆரம்பத்தை 1782 வரை கொண்டு செல்கிறது.

கொடுவ குடும்பம்

இவர்கள் ஹெம்மாதகவிலுள்ள தும்புழவாவ எனுமிடத்திலிருந்து இங்கு குடிபெயர்தோராவர். இவர்கள் 2ம் விமல தர்மசூரியனின் மகனான ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்ஹவின் ஆட்சிக்காலத்தில் (1707 – 1739) அவனது கொடுமை தாளாது தும்பர – பொல்கொல்ல பகுதியிலிருந்து வெறியேறியவர்களாவர்.

குண்டசால ராஜா எனும் புணைப்பெயராலும் அழைக்கப்பட்ட நரேந்திரசிங்ஹ மன்னன் புணைபெயராலும் வழங்கப்பட்டிருந்த நிலபுலண்களை அவர்களிடமிருந்து பறித்ததுடன் அவர்களை அங்கிருந்து விரட்டவும் செய்தான். முஸ்லிம்களி அங்கிருந்து தப்பி பாதுகாப்பாக வாழ்ந்த ஏனைய பிரதேசங்களுக்குத் தப்பிச் சென்றனர். இவ்வாறு வெளியேளியவர்களில் ஒரு குடும்பத்தவர்களில் ஒரு குடும்பத்தவர்களில் ஒருவர் உலப்பனைக்கும், மற்றவர்கள் மூவரும் முறையே ஹிங்குளொயா, துப்புழு சென்றனர்.

இவ்வாறு துப்புழுவாவைக்குத் தப்பிச் சென்றவர்களின் பரம்பரையினரே இங்கு வந்து குடியேறியுள்ளனர். இவர்கள் இன்றும் தும்புழவாவ முஹம்திரன்லாகே என்ற வாசகம் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றனர் இவர்களது குடும்பம் கொடுவே குடும்பம் என அழைக்கப்படுகின்றன. இவர்களே இப்பகுதியின் மூன்றாவது பெரிய குடும்பமாகவுள்ளனர்.

இவ்வாறு ஆரம்பமான இப்பகுதி முஸ்லிம்களின் வரலாறு தெவனகலையில் அண்மித்து சுமார் முன்னூறு வருடங்கள் பழமைவாய்ந்த காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளவர்கள் வாழ்கின்றார்கள். இற்றைக்கு 500க்கு மேற்பட்ட குடும்பங்களை சிங்கள ராவய, மைத்ரீ சஹான பதனம் போன்ற துவேச என்னக்கருத்துக்களைகொண்ட அமைப்புக்கள் இம்முஸ்லீம் மக்களை, இவர்கள் அண்மைக்காலத்துக்குள் பழவந்தாமாக தெவனகல விகாரைக்குச் சொந்தமான காணியில் குடியேறியுள்ளறார் என்றும்.

இந்நிலம் தொழ்பொருள் ஆராய்ச்சி மையத்துக்கு சொந்தமானது என்றும் இதில் இருந்து இவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றும். மற்றும் இதற்கான சட்டவிதிகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆனால் அது அப்பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் விதியாகும் நாம் உங்களை காப்பற்றுவோம் என்றும் பாமர சிங்கள மக்களை ஏமாற்றி வருகின்றனர். அத்தோடு இம்மக்கள் எவ்வளவு காலமாக குறித்த முகவரிகளில் வசித்து வருகின்றார்கள் என்பதற்கு அவர்கள் பதிவான வாக்காளர் இடாப்பும் அதன் ஆண்டுகளும் சாட்சியாகவுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு அப்பகுதி முஸ்லிம் மக்களின் இன்றைய நிலையினை சற்று நோக்கின் இப்பகுதியில் வாழ்கின்ற அனைவரும் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் வேதனைப்பட்டுக்கொண்டுடிருக்கின்றார்கள்.

எதிர்வரும் திங்கட்கிழமை (2013-12-23) மேற்கூரிய அமைப்புகளில் இயங்கி வருகின்ற காடையர்கள் இப்பரதேசத்துக்கு வந்து என்ன செய்யப்போகின்றார்கள் என்ற அச்சம் என்னேரமும் இவர்களது உள்ளத்தில் அடித்துக்கொண்டு இருக்கின்றது.

இந்நாட்களில் கா. பொ. த. (சாதாரண தரம்) பரீட்சைக்கு தோற்றும் மாணவ மாணவிகள் ஒருமித்த மனநிலையோடு பரீட்சைக்கு தயாராக முடியாத நிரலையில் ஒருபுறம், தாங்க முடியாத பொருளாதார பின்னனியில் வாழ்கின்ற குடும்பங்கள் நாம் இதனை இழந்தால் எங்கு போவது? என்ன செய்வது? போன்ற விடைதெரியாத வினாக்களோடு இப்பிரதேச மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களது இக்கேள்விகளுக்கான விடைகள் ………. ?

இனியாவது கிடைக்குமா?(mw)

 

Web Design by Srilanka Muslims Web Team