பௌத்த நாட்டில் மாட­றுப்பை எவ்­வாறு தர்­ம­மாகக் கரு­த­மு­டியும்? - பொது பல சேனா - Sri Lanka Muslim

பௌத்த நாட்டில் மாட­றுப்பை எவ்­வாறு தர்­ம­மாகக் கரு­த­மு­டியும்? – பொது பல சேனா

Contributors

மேல் மகாண ஆளுநர் அலவி மௌலானா இலங்கை, பௌத்த சிங்­கள  நாடு என்­ப­தனை மறந்து செய­லாற்றி வரு­கிறார். கடந்த ஹஜ் பெருநாள் பரு­வத்தில் மாட­றுப்­பதை தர்மம் (பிங்­கம )எனக் குறிப்­பிட்டு அதற்கு இடை­யூ­றின்றி ஒத்­தாசை வழங்­கு­மாறு உள்­ளூ­ராட்சி மன­றங்­க­ளிடம் கேட்­டுக்­கொண்­டி­ருந்தார்.பௌத்த நாட்டில் மாட­றுப்பை எவ்­வாறு  தர்­ம­மாகக் கரு­த­மு­டியும்?ஆகவே ஆளுநர் அலவி மௌலானா அடிப்­ப­டை­வா­தி­களின் நிகழ்ச்சி நிர­லுக்­கேற்­பவே செயற்­ப­டு­கிறார் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் குறிப்­பிட்­டாரர்.
நேற்று முன்­தினம் கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே இதனைத் தெரி­வித்தார்.அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில், இலங்கை பௌத்த தர்­மத்தைப் பாது­காக்கும் நாடு  என  ஜனா­தி­பதி குறிப்­பி­டு­கிறார். அந்த பௌத்த நாட்­டி­லேயே அவ­ரு­டைய பிர­தி­நி­தி­யான ஆளுநர் மாட­றுப்பை தர்மம் எனக்­கு­றிப்­பிட்டு பௌத்த தர்­மத்தை சீர­ழிக்­கிறார்.ஆகவே இந்த அர­சாங்கம் ஒரு புது­மை­யான அர­சாங்­க­மாகும்.எந்­த­வொரு பொறுப்­புக்­கூறும் கடப்­பாடும் இல்லை.
சில அமைச்­சு­களில் , திணைக்­க­ளங்­களில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு வேலை கொடுப்­ப­தில்லை.ஒரு கடி­தம்­கூட பெற முடி­யாத நிலை­யுள்­ளது.புல­மைப்­ப­ரிசில் மூலம் வெளி நாடு சென்று வந்த சிலர் இங்­குள்ள பௌத்­தர்­களை வேறு வழியில் திசை திருப்ப முனை­கி­றார்கள்.இவற்றை பௌத்த விவ­கார அமைச்சு கண்­டு­கொள்­வ­தில்லை. ஆகவே பௌத்த விவகார அமைச்சரை, அமைச்சை விட்டு வீட்டுக்குப் போகச் சொல்கிறோம் எனவும் குறிப்பிட்டார். (vidi)

.

Web Design by Srilanka Muslims Web Team