பௌத்த பிக்குவுக்கு எதிராக 172 முறைப்பாடுகள் - Sri Lanka Muslim

பௌத்த பிக்குவுக்கு எதிராக 172 முறைப்பாடுகள்

Contributors

(JM.Hafeez)

அனுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பௌத்த யாத்ரீகர்களை தம்பதிவ யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 50 இலட்ச ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ள முன்னாள் பௌத்த மத குரு ஒருவரை எதிர் வரும் ஜனவரி 6ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும் படி அனுராதபுரம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

முன்னாள் இராணுவ வீரரும், பிரபுக்கள் பாதுகாப்பு அதிகாரியாகவும் கடமை புரித்து பின்னர் பௌத்த துறவியாக இருந்து அதனையும் கைவிட்ட மேற்படி சந்தேக நபருக்கு எதிராக 172 முறைப்பாடுகள் அனுராதபுரம் பொலீஸில் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கபபடுகிறது.

 

சூரியவௌ பகுதியில் தலை மறைவாக இருந்த போது அனுராதபுரம் பொலீஸார் மேற்படி சந்தேக நபரையும் சாரதியையும் கைதுசெய்து அனுராதபுரம் நீதவான் முன் ஆஜர் செய்த போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team