பௌத்த மேலாதிக்கமும் முஸ்லிம் சிறுபான்மை மீதான அதன் அழுத்தமும் - Sri Lanka Muslim

பௌத்த மேலாதிக்கமும் முஸ்லிம் சிறுபான்மை மீதான அதன் அழுத்தமும்

Contributors

 

-அம்ஜத் ஷஹீத்  அல் அஸ்ஹரி- (BA Hons)

பெளத்த மேலாதிக்க சக்தியாக உருவெடுத்து வரும்  பொதுபலசேனா   போருக்கு பிந்திய இலங்கையின் பல்லின சமுக வாழ்வியல் ஒழுங்குக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது.

இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கெதிரான பேரினவாத அடக்குமுறையின் இலக்குகள் காலத்திற்கு  காலம் வேறுபட்டிருந்தாலும் வழிமுறைகள் என்னவோ ஒன்றாகவே காணப்படுகிறது.

1915ம் ஆண்டு முதல்  1990ம் ஆண்டு வரையான முஸ்லிம் சமுதாயதிற்கெதிரான  மேலாதிக்க சக்திகளின் அடக்குமுறைகளை அவதானித்தால் குறுகிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டங்களாகவே காணப்பட்டிருக்கிறது .

அதனது இலக்குகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப அரசியல், பொருளாதாரம், இனப் பரம்பல்   போன்ற காரணங்களை முன்வைத்து அடையப்பெற்றுள்ளன.

ஆனால்  1990ம்  ஆண்டிற்கு பிறகும், குறிப்பாக போருக்கு பிந்திய இலங்கையின் இன அடக்குமுறையையும்  இதே கண்ணோட்டத்தில் நோக்குவது மேலாதிக்க சக்திகளின் கோர முகத்தின் உணமைத் தன்மையை  அறிவதற்கு  தடையாக அமைந்து விடும்.

பொது பல சேனாவின் ஹலால், கிஜாப், புனித பிரதேசம், மிருக வதை எதிர்ப்பு கோஷங்கள்  பொதுவாக உலக அரங்கில் வழமையாக முன்வைக்கப்படும் இஸ்லாமிய எதிர்ப்பலைகள் போன்றவைதான், இது கால மாற்றத்திற்கேட்ப கரைந்து  போகும் அர்தமில்லாத எதிர்ப்புகள் என்று அலட்சியமாக இருக்க முயாது என்பதை பொது பலசேனாவும் கிழக்காசிய பெளத்த மேலாதிக்கமும்  பலமாக உணர்திக்கொண்டிருக்கின்றது.

இதை சரியாக புரிந்துகொள்ள வரலாற்றின் மீள் வாசிப்பு இச்சந்தர்பத்தில் பொருத்தம் என நினைக்கிறன் .

1915ம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை இலங்கை முஸ்லிம்கெளுக்கெதிரான பேரினவாத அடக்குமுறைகளை அவதானித்தால், பெரும்பாலும் திட்டமிடப்பட்ட அரசியல் காரணங்களும், சிலவேலை  திட்டமிடப்படாத எதேர்சையான  காரணங்களும் இந்நிகழ்வுகளிள் ஆதிக்கம் செலுத்தியுள்ளதை அறிய மூடியும்.

உதாரணமாக    1833 இல் ஆங்கிலேயரால் சட்டசபை முறை  இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில்  1835 இல் அரசாங்க மொழிபெயர்ப்பு சேவைக்கு இனத்துவ நியமனமும்  அறிமுகப்படுத்த பட்டது . இந்நியமனத்தின் படி சிங்களவர், தமிழர், பறங்கியர் என தலா ஒவ்வொருவர் நியமனம்பெற்றனர். இனரீதியான நியமனங்கள் 1835 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதென்பது குறிப்பிடத்ததக்கது. இந்தச் சட்டசபையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவேண்டித் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன

இப்போராட்டங்களின்  தொடர்சியாக  இலங்கையின் ஆங்கிலம் கற்ற வகுப்பினரால் 1910 -1915 இல் பிராந்திய பிரதிநிதித்துவத்தினை  கோரி தலைநகரை மையப்படுத்தி  சாத்வீக, மற்றும் கிளர்ச்சி  போராட்டங்கள் வீரியம் பெற்றது.

இந்த போராட்ட சூழலில், 1915 இல் பௌத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்த கம்பளை விகாரை விகாராதிபதிகள் ஏற்பாடுகளை செய்தனர். இந்த மத ஊர்வலத்தின் போது கம்பளை முஸ்லிம் பள்ளிவாசலைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு எந்தவித ஆரவாரமும்  அத்துமீறல்களும் இன்றி செல்ல வேண்டுமென்ற முஸ்லிகளின் கோரிக்கையை ஏற்ற ஆங்கில அதிகார பீடம் முஸ்லீம்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது.

இதனால் பெரகராவை ஏற்பாடு செய்த கம்பளை பௌத்த விகாரையின்  நிருவாகமும் பக்தர்களும் ஆத்திரமுற்றனர்.  எதிர்த்து கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து  பௌத்தர்களுக்கு ஆதரவாக  தீர்ப்பை பெற்றுகொண்டனர்.
இத்தீர்ப்பை எதிர்த்து அரசாங்க அதிபர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தார். அது பரிசிலிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை உதாசீனம் செய்த பௌத்த சிங்களவர்கள்  முஸ்லிம்களுக்கெதிரான  வன்முறைகளுக்கு வழிவகுத்தனர், இதனால் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.

அரசியல் கொந்தளிப்பும், ஆங்கில அடக்கு முறைக்கெதிரான போர்க் குணமும்  பரவிக்கிடந்த இலங்கையில் இக்கலவரம்  கொழும்பு, கண்டி, குருநாகல், என்று நாட்டின் பெரும் பகுதிக்கு பரவி பல உயிர்களையும்  காவு கொள்ள இலகுவாய் அமைத்தது   .

இது தான் முஸ்லீம்ளுக்கெதிரான, ஏன் இலங்கை வாழ் சிருபான்மைக் கெதிரான  முதலும் முக்கியமானதுமான  கலவரமாகும் .

(கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை  இந்த நாட்டில் இன, மத. மொழி அடிப்படையிலான போராட்டங்கள் இடம்பெற்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை )

இக்கலவரத்தை பொறுத்த வரையில்  பெரும்பாலும் இது ஒரு அரசியல் காரணம் என்றே அன்று ஆட்சியல் இருந்த பிரித்தானிய காலனித்துவ அதிகாரம்  கருதியது. காரணம் உலகை முதலாம் உலகப்போர் சூழ் கொண்டிருந்ததும் அதன் முக்கிய பங்காளியாக பிரித்தானியா இருந்ததாலும்  அரச விரோத சக்திகளின்  திட்டமிட்ட சதியே இதுவென ஆளுநர் றொபட் தோமஸ் கருதினார் .

ஆனால் இக்கலவரத்தின் எதார்த்தமான காரணம்    முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில்  காணப்பட்ட சமூக, கலாச்சார வேறுபாடும், குறிப்பிட்ட இடத்தில் ஆங்கில ஆட்சியாளர்களின்  ஊதுகுழல்களாக  முஸ்லிம்கள் செயற்படுகிறார்கள் என்ற தப்பபிப்பிராயமும், அந்த ஊர்வளத்தை ஏட்பாடு செய்த   கம்பளை பௌத்த விகாரையின் விகாராதிபதி  ‘பஸ்நாயக நிலமேவின்’  பழிவாங்கும்  போக்குமே  என்று அறிந்து கொள்ள முடிகிறது .

இந்த கலவரதை  பொறுத்த வரையில்   குறிப்பிட்ட சமய ஊர்வலத்தில்  தங்களுக்கேற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் முகமாக மேற்கோள்ளப்பட்ட மிலேச்சத்தனமா ஒரு தாக்குதல் மட்டுமே .

இப்படி  குறுகிய  நிகழ்ச்சி நிரலுக்குள்  அவர்களின் திட்டம் முடங்கிப்போனதால் வெற்றிகளிப்பில் சிங்கள பௌத்த மேலாதிக்கமும்  தற்காலிகமாக அடங்கிப்போனது.  ஆனால் பௌத்த சக்திகளால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கலவரம் இதுவே .

இக்கலவரத்தில் தீக்கிரையாக்கப்ட்ட பள்ளிவாயல்கள் –  17
கலவரத்தில் முற்றாக சேதமாக்கப்பட்ட பள்ளிவாயல்கள் – 86
கொள்ளையிடப்பட முஸ்லிம்களின் கடைகள் 4076
கொல்லப்பட்ட முஸ்லிம்கள்- 35
காயமடைந்த முஸ்லிம்கள் 189
மானபங்கப்படுத்தப்பட்ட முஸ்லிம்பெண்கள் 04

இக்கலவரத்தின் பின் நீண்ட ஒரு இடைவெளிக்கு பிறகு 1948ம் ஆண்டு   சுதந்திர இலங்கையில்  பிரதமராக தெரிவு செய்யப்பட்ட டி.எஸ். சேநாயக்க முஸ்லிம்களின் இனப்பரம்பரம்பலை கட்டுப்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களை அடக்கி ஆளவும், நிலங்களை  சுரண்டவும் முற்பட்டு முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள மேலாதிக்க சக்திகளின் முஸ்லிம் விரோதப் போக்குக்கு அடியிட்டுச் சென்றார் .

அதன்  தொடர்சியாக,

1970 பாணந்துறை, காலி, மஹியங்கனை, புத்தளம் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூரையாடி பல உயிர்சேதங்களையும் ஏற்படுத்தினர்.

1976 இல் புத்தளத்தில் பள்ளிவாயில் புகுந்து ஏழு முஸ்லிம்களை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

1974 இல் மஹியங்கன  ‘பங்கரகம்மன’ எனும் முஸ்லிம் கிராமத்தில் கடைகள் பள்ளிவாயல்கள் வீடுகள் எரிக்கப்பட்டன

1980 கெபம்பனித்தெரு பள்ளிவாயல் படுகொலை .
1982 இல் காலி ‘துவ வத்தை’யில் முழுக்கிராமமே விரட்டியடிக்கப்பட்டதன் மூலம் .

சிங்கள மேலாதிக்க சக்திகளின் ஒலுங்கமைகப்படாததும் இ  குறுகிய நிகழச்சி நிரலுகுற்பட்டதுமான  வெறியாட்டதிற்கு முற்றுப்புள்ளி வைத்த தேரவாத பௌத்தம் .

1990ல் ஒழுங்கமைக்கப்பட்டதும்,  சீரமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுகுட்பட்டதுமான மேலாதிக்கத்தை  ‘சிங்கள மகாபோதி சபை’ உருவில் ஆரம்பித்து வைத்தது .

தொடரும் ……

Web Design by Srilanka Muslims Web Team