பௌத்த விகாரைகளும் பள்ளிவாசல்களும் » Sri Lanka Muslim

பௌத்த விகாரைகளும் பள்ளிவாசல்களும்

pikku1

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Rasmy Galle


பௌத்த விகாரைகள் சன சமூக நிலையங்களாக, பிரத்தியேக பாலர் வகுப்பு முதல் உயர்தர வகுப்புக்கள் நடைபெறும் கல்விக் கூடங்களாக, சிங்கள இளைஞர்களின் திறன் விருத்தி சார் செயற்றிட்டங்களை ஒழுங்குபடுத்தும் நிலையங்களாக இதுவரை காலமும் செயற்பட்டதனையும் தாண்டி சிங்கள மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டும் தளமாகவும் இன்று மாறிவிட்டன.

 ஆனால் கோடிக்கணக்கில் செலவு செய்து தெருவுக்குத் தெரு கட்டப்படும் எமது பள்ளிவாயல்களோ இன்னமும் வெறும் தொழுகைக் கூடங்களாகவும், சாப்பாடு வழங்கும் தளங்களாகவும், நோன்பு காலத்தில் கஞ்சி வழங்கும் தளங்களாகவும், குறிப்பிட்ட ஒரு ஜமாஅத்தினர் மாத்திரம் ஏனைய ஜமாஅத்துக்களின் நல்ல திட்டங்களையும் செயற்படுத்தவிடாமல் தடுத்துக் கொண்டு ஜமாஅத் பயணம் என்ற பெயரில் பள்ளியில் தங்கிய வண்ணம் கப்ஸாக்கள் நிறைந்த தஹ்லீம் கிதாபை வாசித்து வாசித்து மீதி நேரங்களில் தூங்கும் தளங்களாகவும் ஆக்கப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் ஒரு வாசிகசாலையாயினும் எமது பள்ளிவாயல்களில் இல்லை. உள்ளூராட்சி சபை (சிங்கள) உறுப்பினர்கள் தமக்கு ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சிங்கள விகாரைகளில் வாசிகசாலைகளையும், சிங்கள ஊர்களில் சனசமூக நிலையங்களையும் உருவாக்கி விட்டு முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு எந்த நாளும் “சட்டி” களை மாத்திரம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சோனகன் சோத்துக்குத்தான் லாயக்கு என்பதனை அவனும் நல்லாகவே புரிந்து வைத்துள்ளான். இந்த நிலையில் எப்படி ஒரு சமூக மாற்றத்தினை உருவாக்க முடியும்.

எல்லா பள்ளிவாயல்களையும், ஊர்களையும் ஆக்கரமித்துக் கொண்டு 24 மணித்தியாலமும் பயான் என்ற பெயரில் அறுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜமாஅத்தினால், இவ்வளவு காலமும் ஒரு சிறந்த, கட்டுக்ேகாப்பான, அறிவார்ந்த சமூகத்தினை உருவாக்க முடியவில்லை. காரணம் அவ்வாறான திட்டங்கள் அவர்களிடம் இல்லை.

 மிகப் பாமரத்தனமான அவர்களது தஹ்வா நடவடிக்ைககள் சமூகத்தில் எவ்விதத் தாக்கத்தினையும் ஏற்படுத்தப் போவதில்லை. உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர் கடந்த அல்ஹஸனாத்தில் சொல்வது போல, எல்லோருக்கும் நன்மை கிடைக்கின்ற மனித நேய இஸ்லாத்தினை, உள்ளங்களைக் கனிவுறச் செய்யும் நற்குண இஸ்லாத்தினை, சமூகங்களை ஒன்றிணைக்கின்ற பண்பாட்டு இஸ்லாத்தினை, வாடிக்ைகயாளர்களுக்கு சேவையாகக் கிடைக்கின்ற வியாபார இஸ்லாத்தினை,

அனைவர்களது பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கின்ற அரசியல் இஸ்லாத்தினை, தூய்மையை பாதுகாக்கும் சுற்றாடல் இஸ்லாத்தினை, சிறந்த பிரஜைகளை நாட்டுக்கு வழங்கும் கல்வியியல் இஸ்லாத்தினை, கண்குளிர்ச்சியைக் கொடுக்கும் குடும்பவியல் இஸ்லாத்தினை, முரண்பாடுகளைத் தீர்க்கும் கலந்துரையாடல் இஸ்லாத்தினை, சிந்தனைகளை விரிவாக்கும் கோட்பாட்டு இஸ்லாத்தினை, சுதந்திரத்தினை அர்த்தம் கற்பிக்கும் மனித உரிமை இஸ்லாத்தினை, நாம் மேம்படுத்தவில்லை. மாறாக நீண்ட தாடியும், மொட்டைத் தலையும், அரபிகளின், பாகிஸ்தான் காரர்களின் நீண்ட ஜூப்பா அங்கியும், தஸ்பீஹ் கோர்வையும், பேணுதல் என்ற பெயரில் சுவாரசியம்

, நகைச்சுவை, கலகலப்பு இல்லாத இறுகிய முகத்தினையும், கருப்பு அபாயாக்களையும், முகமூடிகளையும் கொண்ட “அடையாள” இஸ்லாத்தினைத் தான் நாம் ப்ரமோட் பண்ணியிருக்கின்றோம். கூடவே, இஸ்லாமியப் பெயர் தாங்கிய வீதிப் பலகைகள், வியாபார விளம்பரங்கள், இஸ்லாமியப் பெயர் கொண்ட வங்கிகள், பாடசாலைகள், வீதிகளில் நடப்பட்டுள்ள பேரிச்சம் மரங்கள், ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் ஒலிக்கப்படும் எந்தவித இராகமுமில்லாத பாங்கோசைகள், வீதி தோரும் உலா வரும் அரபு தேசத்தின் ஆடைகள் என்று அனைத்துமே அடையாள இஸ்லாமாகவே (Symbolic Islam) இருக்கின்றன. இக்காட்சிகளைப் பார்க்கும் நடுநிலையான ஒரு அந்நியன் கூட இஸ்லாமோபோபியாவால் பாதிக்கப்பட்டு இஸ்லாம் பற்றிய மதிப்பச்சினை உருவாக்கிக் கொள்கின்றான்.

ஆக, அடையாள இஸ்லாத்தினை ப்ரமோட் பண்ணும் பாமரத்தனமான அமைப்புக்களில் இருந்து இஸ்லாத்தினையும் முஸ்லிங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது. இவர்கள் திருந்துவார்கள் என்று பார்த்தால், இருந்ததனை விட நுஸ்ரானியத் தனமான மடமைகளுக்குள் இன்னும் வேகமாகப் போய் கொண்டிருக்கின்றார்கள்.

என்னைப் பொருத்தவரை, ஜமாஅதே இஸ்லாமி அமைப்பு எதிர்ப்புக்களுக்கு அஞ்சிக் கொண்டு வைட் கொலர் தஹ்வா செய்து கொண்டிருக்காமல் சமூகத்தின் இந்த அவல நிலைக்கு முடிவு கட்ட களம் இறங்க வேண்டும். ஏனெனில் ஜமாஅத்தோடு எனக்குள்ள தொடர்புகள் என்ற வகையில் மிகச் சிறந்த இஸ்லாமிய கற்கை நெறிகள், கல்வி சார் செயற்றிட்டங்கள், சமூக சேவைப் பிரிவுகள், மாணவர் அமைப்புக்கள் கொண்ட ஒரே அமைப்பு ஜமாஅதே இஸ்லாமி தான்.

 அதன் கட்டமைப்பு, அதன் சமூக நேவைப் பிரிவான Serendif Foundation for Releif and Development இனபல் மேற்கொள்ளப்படும் ஆயிரக்கணக்கான மிகச் சிந்த சமூக சேவைத்திட்டங்கள், அநாதைகள் பராமரிப்பு நிலையங்கள், நாடளாவிய ரீதியில் 4500 க்கு மேற்பட்ட அநாதைப் பிள்ளைகளின் கல்விக்காக மாதாமாதம் உதவுதல், வட்டியையும் வறுமையையும் ஒழிக்க அது மேற்கொள்ளும் நுண்கடன் திட்டங்கள் ….. இப்படி அதன் நூற்றுக்கணக்கான செயற்றிட்டங்கள் பற்றி மக்களுக்குத் தௌிவுகள் பிறக்க வேண்டும். ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களும் இப்படி தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிமல்லாதவர்களும் முஸ்லிங்கள் பற்றிய மிக உயர்வான நல்லெண்ணம் வைக்கும் விதத்தில், இந்த சமூகம் எமது நாட்டுக்கு மிகவுமே தேவையான சமூகம் என்று வாழ்த்துகின்ற வித்தில் எமது இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தினை மாற்றியமைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

தேசியத்தினை மதித்து, தீவிரவாதப் போக்குகளைக் கைவிட்டு, மற்ற சமூகங்களுக்கு தொந்தரவு இல்லாத அதே நேரம் அவர்களுக்கு பிரயோசனப்படுகின்ற சமூகமாக , குர்ஆன் கூறும் நடுநிலைச் சமூகமாக நாம் மாற வேண்டும்.

Web Design by The Design Lanka