மகளை சித்திரவதை செய்து கொன்ற மதகுருவுக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனையும்; 600 கசையடி! - Sri Lanka Muslim

மகளை சித்திரவதை செய்து கொன்ற மதகுருவுக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனையும்; 600 கசையடி!

Contributors

hhh

மகளை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மதகுருவுக்கு சவுதியில் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஒக்டோபர் மாதம் லாமா அல் காம்டி என்ற சிறுமி தந்தையின் கொடூர தாக்குதலுக்குள்ளாகி அவரதுமண்டையோடு நொறுங்கியிருந்துடன், மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

அச்சிறுமி பல முறை வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தாகவும் தகவல் வெளியாகியிருந்த போதிலும் அதனை அவரது தாயார் மறுத்திருந்தார். இச்சம்வம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது சிறுமியின் கொலைக்கு காரணமான அவரது தந்தை சில மாதங்கள் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சிறுமியின் தாய்க்கு அதாவது தனது மனைவிக்கு குருதிப் பணம் செலுத்த இணங்கியமையால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் இதன் பின்னர் அல் காம்டியை தண்டிக்க வேண்டுமெனவும் லாமாவின் கொலைக்கு நீதி வேண்டுமெனக் கோரியும் சவுதிக்கு பல நாடுகளால் அழுத்தம் ஏற்பட்டதால் மறுபடியும் விசாரணைக்கு வந்த இவ் வழக்கில் சிறுமியின் மரணத்திற்கு காரணமான தந்தைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 600 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team