மகிந்தவின் கனவுகள் சுக்குநூறாகியும் இனவாத சக்திகள் இன்னும் பாடம்கற்கவில்லை - YLS ஹமீட்டின் ஊடக அறிக்கை - Sri Lanka Muslim

மகிந்தவின் கனவுகள் சுக்குநூறாகியும் இனவாத சக்திகள் இன்னும் பாடம்கற்கவில்லை – YLS ஹமீட்டின் ஊடக அறிக்கை

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட்டின் ஊடக அறிக்கை

 

 
மஹிந்த ராஜபக்ச பட்டும் தேறாதவர் என்ற பட்டியலில் சேர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரச கட்டிலில் ஏற்றுவதற்காக சில கட்சிகளும், அமைப்புக்களும் பகிரதப் பிரயத்தணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
ஓர் ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு அதற்கான உரிமை உண்டு. ஆனாலும் தமது இலக்கை அடைவதற்காக இன்னுமொரு சமுகத்தை சீண்டி அல்லது மலினப்படுத்தி அதனை அடைய முயற்சிப்பது அரசியலில் வங்குரோத்து தனமாகும்.

 

இனவாதத்தை கையில் எடுத்து கற்பனையில் சிறுபாண்மையினருக்கு எதிராக உலருகின்ற பொதுபல சேனா விமல் வீரவன்சவின் ராவனா பலய இன்னும் சில இனவாத அமைப்பையும் தூண்டிவிட்டு அதன் மூலம் பெரும்பாண்மை மக்களின் உணர்வுகளை உசிப்பி தனது ஆட்சியை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்லாம் என்று கனவு கண்ட மகிந்த ராஜபக்சவின் கனவு சுக்கு நூறாகியும் இன்னும் இந்த இனவாத சக்திகள் பாடம் படித்தாகச் தெரியவில்லை.

 

பொதுபலசேனாவின் உலரல்களுக்கு பக்கவாத்தியம் இசைப்பதற்காக தாய்நாட்டுக்கான கலைஞர்கள் அமைப்பு என்ற பெயரில் ஒர் அமைப்பு புறப்பட்டு இருக்கின்றது. இன்று அவர்களும் முஸ்லீம்களுக்கு எதிராக அறிக்கைவிட ஆரம்பித்துள்ளனர். கலைஞர்கள் என்பவர்கள் இன,மத வேறுபாடுகளுக்கப்பால் செயற்படுகின்றவர்கள் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் கலைஞர்களின் பெயரால் ஒர் அமைப்பு இனவாதத்தை கையில் எடுத்திருக்கின்றது என்றால் ‘சோலியன் குடுமி சும்மா ஆடவில்லை’ என்பது மட்டுமல்லாமல் அது ஆட்டப்படுகின்றது. என்பது தெளிவாகின்றது.

 

ஒரு சமுகம் எண்னிக்கையில் குறைவாக இருக்கின்றது என்பதற்காக எண்னிக்கை கூடிய சமுகத்தில் இருந்து ஒரு சிலர் இவ்வாறு சிறிய சமுகத்தை தொடர்ந்து தீண்டுவது கோழைத்தனமானது மட்டுமல்ல பக்க விலைவுகளையும் ஏற்படுத்தக் கூடியதாகும்.
எனவே மஹிந்த ராஜபக்ச பட்டும் தேறாதவர் என்ற பட்டியலில் சேர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளட்டும்.

Web Design by Srilanka Muslims Web Team