மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் இது; ரணிலுக்கு புகழாரம் - மஹிந்த அமரவீர! - Sri Lanka Muslim

மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் இது; ரணிலுக்கு புகழாரம் – மஹிந்த அமரவீர!

Contributors

ராஜபக்ஷ குடும்பம் பொதுமக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளதாலும், மோசமான உடல்நிலையை கருத்தில் கொண்டும், மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் இது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (30) நடைபெற்ற ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் மாவட்டப் பிரிவு அமைப்பாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போதெல்லாம் அதிபர் ரணில் விக்ரமசிங்க,தனது சிறந்த பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவும் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் செயற்பட்டதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர புகழாரம் சூட்டியுள்ளார்.
2001ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்த போது ரணில் விக்ரமசிங்க பிரதமரானார்.

Web Design by Srilanka Muslims Web Team