மகுடத்தை மீளளிக்க மாட்டார் ஜுரி? மீண்டும் வரும் சர்ச்சை - Sri Lanka Muslim

மகுடத்தை மீளளிக்க மாட்டார் ஜுரி? மீண்டும் வரும் சர்ச்சை

Contributors

உலக திருமதி அழகுராணியாக முடிசூட்டப்பட்ட இலங்கையின் கரொலின் ஜுரி தனது மகுடத்தை திருப்பிக் கொடுக்கப் போவதாக வெளியான தகவல் பிழையாக விமர்சிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்முறை இலங்கையில் நடந்த உலக திருமதி அழகுராணிப் போட்டிக்குத் தலைமைவகித்த சந்திமால் ஜயசிங்க இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

முறைப்படி ஏற்கனவே அழகுராணியாக மகுடத்தைப் பெற்றவர், அதனை அடுத்த போட்டியில் வெற்றிபெற்றவருக்கு கையளிக்கப்படுவது வழக்கம் என்று அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நேற்று முகநூலில் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கரொலின் ஜுரி, தனது கிரீடத்தை மீளளிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team