மக்களது குரலாக ஒலிக்கும் ஒரு தலைமை இருக்குமென்றால் அது றிசாத் பதியுதீன் தான் » Sri Lanka Muslim

மக்களது குரலாக ஒலிக்கும் ஒரு தலைமை இருக்குமென்றால் அது றிசாத் பதியுதீன் தான்

irshad

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும்,இந்த இடத்தில் நின்று அம்மக்களது குரலாக ஒலிக்கும் ஒரு தலைமை இருக்குமென்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையான றிசாத் பதியுதீன் என்று அமைச்சரின் இணைப்பு செயலாளரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளத்தில் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம் போல்ஸ் வீதியில் நேற்று இரவு இடம் பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து  கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,வைத்தியருமான  எம்.ஜ.இல்யாஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில்  மேலும் இர்ஷாத் றஹ்மத்துல்லா உரையாற்றுகையில் –

புத்தளத்தினை பொறுத்த வரையில் இன்று புதிய அரசியல கலாசாரம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டியுள்ளது.நகரத்தை தொடரந்தேச்சையாக நாமே ஆள வேண்டும் என்று சலர் கங்கனம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.ஏன் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வேறு எவரும் ஆள தகுதியில்லையா என கேட்க விரும்புகின்றேன்.

குறிப்பாக இந்த புத்தளம் சமூகத்திற்கு அரசியல் அந்தஸ்த்தினை பெற்றுக் கொடுத்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.இந்த அரசியல் அந்தஸ்த்து என்பது வெறுனே உரிமை உரிமை என்று கூவித்திரிவதன் மூலம் கிடைக்கப் போவதில்லை.மக்கள் அபிவபிருத்திகளை காணாமல் எப்படி உரிமையை அனுபவித்தது.

இந்த நாட்டில் அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ கட்சி அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் சிறந்த பணியினை ஆற்றி வருகின்றது. அபிவிருத்திகளை புத்தளத்திற்கு கொண்டுவர முடிந்தமை இந்த இயக்கத்தின் மக்கள் பலம். புதிய ஜனாதிபதியினை 2015ஆம் ஆண்டு கொண்டுவர பெரும் பங்காற்றியவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்றைய பாராளுமன்ற பிரதி நிதித்துவங்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,உள்ளிட்ட மக்கள் பிரதி நிதிகள் என 69 க்கும் மேற்பட்டோர் ஓரணியில் அமைச்சர் தலைமையில் ஆதரவு வழங்கியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் வளர்ச்சியில் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருக்கின்றார்கள்.மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற துடிப்புள்ளவர்கள் இருக்கின்றார்.அவர்களது  பங்களிப்புடன் அமைச்சரின் துாய சிந்தணை இந் த கட்சியின் வளர்ச்சிக்கு காரணமாகும்.இதன் மூலம் இன்று புத்தளம் பல நன்மைகளை கண்டுள்ளது.

யுவதிகளுக்கான சுய தொழில் வாய்ப்புக்கள்,அரச நியமனங்கள்,பாதை அபிவிருத்திகள்,பாடசாலை அபிவிருத்திகள்,வைத்திய சாலை அபிவிருத்திகள்,மற்றுன் இன்னோரன்ன அபிவிருத்திகளை அவரி்  தந்துள்ளார்.ஆனால் கடந்த 17 வருடங்களாக தலைமையில் இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்  இந்த புத்தளம் மக்களை மாற்றாந்தாய் மனப்பாய்மையுடனேயே நடத்தி வந்துள்ளது.இனியும் இப்படிப்பட்டவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி வாக்களிப்பீர்கள் என்றால் இன்னும் எமது தேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத துரதிஷ்டமே.

இன்று அரசியல் பிழைப்புக்காக சிலர் முகப் புத்தகங்களில்  கள்ள பெயர்களில் உலமாக்களை தேவயற்ற முறையில் விமர்சிக்கின்றனர்.தயவு செய்து அதனை செய்யாதீர்கள்.உலமாக்கள் என்பவர்கள் ரசூல் (ஸல்) அவர்களின்் வாரிசுகள்.அவர்கள் குர்ஆனை சுமந்தவர்கள் ,கண்ணியமிக்கவர்கள்,அவர்கள் தவறிழைத்தால் அது அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் இடையில் இருக்கும் விடயம் என்பதை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

நகர சபையின் ஆட்சியினை மக்கள் உங்கள் தருவாரத்கள் என்றால் அதனை பெற்றுக் கொள்ளுங்கள்.அதற்காக இந்த ஜனறாயக தேர்தல்.செய்வதை,செய்துள்ளதை,செய்ய உள்ளதை தெரிவித்து வாக்குகளை பெறுங்கள் மாறாக மற்றவர்களை அவமதித்து அதன் மூலம் நீங்கள் வாக்குகளை பெறலாம் என நினைப்பதை மடையாகும் .

இந்த தேர்தல் புத்தளம் நகர சபையின் அதிகாரம் ஜக்கிய தேசிய கட்சிக்கு என்பதற்ககு போதுமான தரவுகள் உள்ளன.எனவே வெறுமனே கால நேரத்தை வீனடிக்காமல் வெற்றியின் பங்காளர்களாக நீங்கள் மாறுங்கள் என அழைப்புவிடுக்கின்றேன்.

ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வாரு தலைவர்கள் இருக்கின்றார்கள்.அதே  போல் தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கின்றார்.அதனை தடுத்து நிறுத்துவதற்கு மாற்றுக் கட்சி காரர்களுககு எந்த உரிமையும் இல்லை  என தெரிவித்துள்ள இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம் நகர சபையின் ஆட்சி ஜக்கிய தேசிய கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்த கூடடுக்கே என்றும் கூறினார்.

Web Design by The Design Lanka