மக்களின் அபிலாஷைகளையும்.தேவைகளையும் நிவர்த்தி செய்யக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள். » Sri Lanka Muslim

மக்களின் அபிலாஷைகளையும்.தேவைகளையும் நிவர்த்தி செய்யக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள்.

2-BM.SIFAN-07-01-2018

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வேட்பாளர் பஹூறுத்தீன் முகம்மது சிபான்.
(மருதமுனை தினகரன் நிருபர்)


உள்ளுராட்சி மன்றம் என்பது பிதேசத்தின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டதாகும்.இது அந்தந்த வட்டார மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் களமாகும்.இந்த வட்டாரத்திற்குரிய பிரதிநிதியைத்  தெரிவு செய்யும் போது பல விடையங்களை  கவனத்தில் எடுக்க வேண்டும் இது மிக முக்கியமானதாகும் என மருதமுனை 5ஆம் வட்டாரத்தில் பயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் பஹூறுத்தீன் முகம்மது சிபான் தெரிவித்தார்.

மருதமுனை 5ஆம் வட்டாரத்தில் நேற்று(08-01-2018)நடைபெற்ற கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரடர்ந்து உரையாற்றுகையில் :-நீங்கள் தெரிவுசெய்கின்ற ஆளுமைகள் அந்தப் பிரதேசத்தைத் திட்ட முறையில் அபிவிருத்தி செய்வதற்குரிய வினைத்திறன் உள்ளவராகவும்,சமூக நோக்குடன் சிந்திப்பவராகவும் இருக்க வேண்டும்.

சாதாரண மக்களின் கஷ்டங்களையும் உணர்ந்தவராகவும்,ஊழல் மோசடிகள் அற்ற சேவைகளை செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவராகவும் இருக்க வேண்டும் அப்போதுதான் அந்தப்பிரதேசம் அபிவிருத்தியில் வளர்ச்சியமையும்.மருதமுனை மக்கள் படித்தவர்கள் யாரைத் தெரிவு செய் வேண்டும் என்பதில் மிகவும் கவனமாகச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இலங்கை முஸ்லிம் எதிர் நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முன்நின்று துணிந்து முகம்கொடுக்கின்ற,செயற்படுகின்ற ஒரு தலைமையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களைப் பார்க்கின்றேன் அதனால்தான் அவரது தூய்யான பயணத்தில் இணைந்திருக்கின்றேன்.இந்தத் தலைமைக்கா என்னால் முடிந்த பணிகளைச் செய்வேன்.

எனவே எனது 5ஆம்  வட்டார மக்கள் மயில் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் எமது வட்டாரத்தில் தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவேன்  என அவர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka