மக்களின் பணத்தை ஏப்பமிட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, மகன் இந்தியாவில் கைது..! » Sri Lanka Muslim

மக்களின் பணத்தை ஏப்பமிட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, மகன் இந்தியாவில் கைது..!

Contributors
author image

Farook Sihan - Journalist

மக்களின் பணத்தை ஏப்பமிட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர், மனைவி, மகன் இந்தியாவில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள், தமது உண்மையான விவரங்களை மறைத்து ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில், இலங்கையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் எனத்தெரிய வந்துள்ளது.

வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு பைப்பர் படகில் திருகோணமலைப் பகுதியைச்சேர்ந்த முகமது அன்சாரி (வயது 45), அவரது மனைவி சல்மா வேகம் (வயது 35), இவர்களது மகன் அன்சார் (வயது 10) என்ற பெயரில் கோடியக்கரை சவுக்கு காட்டில் வந்திறங்கினர்.

இந்த மூவரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நிதி நிறுவனமொன்று நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நிலையில், பல்வேறு பிரதேசங்களில் நீதிமன்றங்களில் இவருக்கெதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்களாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம் கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டியங்கியதுடன், கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும் நாடு முழுவதிலும் 1200 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ளனர்.

FB_IMG_1604730313983

Web Design by The Design Lanka