மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாத அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருப்பது கவலைக்குறியது..! - Sri Lanka Muslim

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாத அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருப்பது கவலைக்குறியது..!

Contributors

மக்கள் பிரச்சினைகளை புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர்கள் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருப்பது குறித்து கவலையடைவதாக ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மக்கள் வழங்கும் விருப்பு வாக்கை பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று அந்த மக்களுக்கு சேவை செய்யவில்லை என்றால், அந்த விருப்பு வாக்குக்கு வழங்கும் பெறுமதி என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆனமடுவ தொகுதியில் காட்டு யானை மற்ம் மக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்து வனஜீவராசிகள் அமைச்சருக்கு தெரியப்படுத்திய போது, மக்களுக்கு முன்னால் வீரனாக மாற முயற்சிக்க வேண்டாம் எனக் கூறுகிறார்.

எனக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. இப்படியான பாரதூரமான பிரச்சினையை புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர்கள் எமது அரசாங்கத்தின் அமைச்சரவையில் உள்ளனர். நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டோம். மக்கள் பணத்தில் பராமரிக்கப்படுகிறோம். அப்படியானால் ஏன் மக்களுக்கு சேவை செய்ய முடியாது.

இதன் காரணமாக அரசாங்கத்திற்குள் நாங்கள் செய்வதறியாது இருக்கின்றோம். இப்படியான சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே இருக்கின்றனர் என்பதையும் கூற வேண்டியது அவசியம். இந்த சில அமைச்சர்கள் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாகி வருகின்றனர் எனவும் ராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team