மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன்: நரேந்திர மோடி - Sri Lanka Muslim

மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன்: நரேந்திர மோடி

Contributors

நான் உங்களுக்காக வாழ்பவன், தேவைப்பட்டால் உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார் நரேந்திர மோடி.
புனேயில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையிலேயே நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பேசுகையில், நாட்டில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கின்றன, பாரதிய ஜனதாவும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றது.

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, பாரதிய ஜனதா முக்கிய கூட்டணி கட்சியாக இருந்தது.

இதேபோல் வாஜ்பாய் தலைமையிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது. இந்த இரண்டு ஆட்சிக்காலத்தில் மட்டும்தான், பணவீக்கம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

எப்போதெல்லாம் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் ஆதரவு அரசு அமைகிறதோ அப்போதெல்லா பணவீக்கத்தை மக்கள் எதிர்கொண்டனர்.

ஜனநாயகத்தில் உள்ள அரசாங்கம் இதற்காக மக்களிடம் பதில் சொல்ல வேண்டாமா? இந்த அரசாங்கம் மக்களுக்கு பதில் அளித்ததா? ஊடகங்கள் கூட அவர்களிடம் பதில் பெற முடியாதது வியப்பாக உள்ளது.

2014 தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல, ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் என்ன செய்தோம் என்பதை தெரியப்படுத்துவோம். நான் உங்களுக்காக வாழ்வேன், தேவைப்பட்டால் உங்களுக்காக உயிரையும் விடுவேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team