மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் - Sri Lanka Muslim

மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில்

Contributors
author image

A.S.M.இர்ஷாத்

 
இலங்கை தமிழ் சுடர்மணிகளில் ஒருவரான மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு  கொழும்பு தமிழ் சங்கத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(14) முற்பகல் நடைபெற்றது.

 

இதன்போது முன்னாள்  கொழும்பு தமிழ் சங்க தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றியதுடன் மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் வாழ்வும், பணியும் நினைவுப் பேருரையை  அந்தனி ஜீவா நிகழ்த்தினார்.

 

மக்கள் கவிமணி சி.வியின் திருவுருவப் படத்திற்கு சி.வியின் மகள் திருமதி ஜீன் விமலச10ரிய மலர்மாலை அணிவித்து நினைவுச் சுடர் ஏற்றினார்.

 

இதன்போது மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் வரலாற்று நூலை கொழும்பு தமிழ் சங்க நூலகத்திற்கு வழங்கப்பட்டது. சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து கொழும்பு தமிழ் சங்க செயலாளர் தம்பு சிவா நூலை பெற்றுக் கொண்டார்.

 

கவிஞர் திலகர் உட்பட முக்கியஸ்தர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

10

 

11

 

12

 

13

 

14

 

15

 

16

Web Design by Srilanka Muslims Web Team