மக்கள் பயணக்கட்டுப்பாடுகளை மதித்து செயற்பட்டால் 14 ஆம் திகதிக்கு பின் நாட்டினை திறப்பதற்கு வாய்ப்பு..! - Sri Lanka Muslim

மக்கள் பயணக்கட்டுப்பாடுகளை மதித்து செயற்பட்டால் 14 ஆம் திகதிக்கு பின் நாட்டினை திறப்பதற்கு வாய்ப்பு..!

Contributors

கொரோனா வைரஸ் தொற்று நிலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளது.

இந்தக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

14 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மதித்து பொதுமக்கள் வீடுகளில் இருந்தால் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் நாட்டினை திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தை இன்று (05) தெரிவித்துள்ளார்.

எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team