மக்காவில் பெண்கள் கேம் விளையாடியதால் சர்ச்சை!!! » Sri Lanka Muslim

மக்காவில் பெண்கள் கேம் விளையாடியதால் சர்ச்சை!!!

makka

Contributors
author image

Editorial Team

மக்கா மசூதியில் பெண்கள் போர்ட் கேம் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் சவுதி அரேபியாவில் உள்ள மக்காவை புனித நகரமாக போற்றுகின்றனர். மேலும் அனைத்து பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் இங்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் பெண்கள் நான்கு பேர் மக்கா மசூதியில் அமர்ந்து கொண்டு போர்ட் கேம் விளயாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு இஸ்லாமியர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த சர்ச்சை குறித்து சவுதி அரேபியா அரசு விளக்கம் அளித்துள்ளது ’அந்த விளக்கத்தில்

“கடந்த வெள்ளிக்க்கிழமை பெண்கள் மெக்காவில் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் இங்கு விளையாட கூடாது என அனுப்பி வைத்தனர்’என்று கூறியுள்ளனர்.

Web Design by The Design Lanka