மக்காவில் முஸ்லிம் யாத்திரிகர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர்: அமைச்சர் பௌசி - Sri Lanka Muslim

மக்காவில் முஸ்லிம் யாத்திரிகர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர்: அமைச்சர் பௌசி

Contributors
author image

Editorial Team

இந்த முறை ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்கு சென்ற இலங்கையின் முஸ்லிம் யாத்திரிகர்கள் விசேட மென்பொருளை பயன்படுத்தி கண்காணிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர் ஏ எச் எம் பௌசி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

இலங்கையில் இருந்து ஜெட்டாவுக்கு முதல்கட்டமாக 48 முஸ்லிம் யாத்திரிகள் நேற்று சென்றடைந்தமையின் பின்னரே இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே 3200 இலங்கை யாத்திரிகர்களுக்கு ஹஜ் கோட்டா அனுமதி வழங்கியிருந்தது.

 

எனினும் மக்காவில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் காரணமாக இந்த முறை அது 20வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

 

இந்நிலையில் இலங்கை யாத்திரிகளின் உணவு உடை மற்றும் பாதுகாப்பு விடயங்களை கருத்திற்கொண்டு அவர்கள் விசேட மென்பொருளை பயன்படுத்தி கண்காணிக்கப்படவுள்ளதாக அமைச்சர், அரப் நியூஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team