மங்­கள சம­ர­வீர எம்.பி.யின் கருத்­து­களில் உண்மை இருக்­கலாம். சபா­நா­யகர். - Sri Lanka Muslim

மங்­கள சம­ர­வீர எம்.பி.யின் கருத்­து­களில் உண்மை இருக்­கலாம். சபா­நா­யகர்.

Contributors

 

பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சு மீதான விவாதம் நேற்று இரண்டாம் நாள் குழு­நி­லையில் விவா­திக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் மங்­கள சம­ர­வீர எம்.பி.க்கு தொடர்ந்தும் ஆளும் கட்­சி­யினர் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­ததை அவ­தா­னித்த சபா­நா­யகர் சமல் ராஜ­பக்ஷ உங்­க­ளது (ஆளும் கட்­சி­யி­னரைப் பார்த்து) நட­வ­டிக்­கை­களை பார்க்­கையில் மங்­கள சம­ர­வீர எம்.பி.யின் கருத்­து­களில் உண்மை இருக்­கி­றது என்றே எண்ணத் தோன்­று­கின்­றது எனத் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 2014 ஆம் ஆண்­டுக்­கான வரவு- செலவுத் திட்­டத்தின் இரண்டாம் நாள் குழு நிலை விவா­தத்தை ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாத்­தறை மாவட்ட எம்.பி.யான மங்­கள சம­ர­வீர ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றினார்.

பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் மீதே நேற்­றைய விவாதம் இடம்­பெற்­றது.

இதன்­போது,- பேசிய மங்­கள சம­ர­வீர எம்.பி. மனித உரி­மைகள் தொடர்­பி­லான விட­யங்கள், கொம்­ப­னித்­தெ­ருவில் வீடுகள் தகர்க்­கப்­பட்­டமை, பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன் தொடர்­பு­பட்ட விட­யங்கள் மற்றும் பிரித்­தா­னி­யாவின் கொன்­சர்­வேட்டிவ் கட்­சிக்கு நிதி­ய­ளிப்பு ஆகிய விட­யங்கள் குறித்து பேசிக்­கொண்­டி­ருந்­த­போது ஆளும் கட்­சி­யினர் தொடர்ந்து இடை­யூறு­களை ஏற்­ப­டுத்­தினர்.

ஏ.எச்.எம்.அஸ்­வர், அமைச்சர் மேர்வின் சில்வா,- பிர­தி­ய­மைச்சர் லலித் திஸாநாயக்க உள்­ளிட்டோர் கடும் எதிர்ப்­பு­களை வெளி­யிட்ட வண்­ண­மி­ருந்­தனர்.

சபையின் குழப்ப நிலையை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு சபா­நா­யகர் பல தடவை முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தார். எனினும், அது செவி­ம­டுக்­கப்­ப­டா­ததால் மங்­கள கூறும் கூற்­றுகள் உங்­க­ளது நடத்­தை­யி­னூ­டாக பார்க்­கையில் உண்­மை­யி­ருக்­கி­றது என்றே தோன்­று­கின்­றது என்றார்.

இதே­வேளை, சம்­பந்தன் எம்.பி. உரை­யாற்­றி­ய­போது ஆளும் கட்­சி­யினர் இடை­யூறு­களை ஏற்­ப­டுத்­திய அதே­வேளை அமைச்சர் தினேஷ் குண­வர்­தன உரை­யாற்­றிய சந்­தர்ப்­பத்தில் அவ­ருக்கு ரவி­க­ரு­ணா­நா­யக்க மற்றும் மங்­கள சம­ர­வீர, எம்.ஏ.சுமந்­திரன் ஆகிய எம்.பி.க்களும் முரண்­பட்­டனர்.

ஒரு சந்­தர்ப்­பத்தில் ஆவே­ச­ம­டைந்த சுமந்­திரன் எம்.பி. ஆளும் கட்­சியின் சூரி­யப்­பெ­ரும எம்.பி.யைப் பார்த்து சிங்­கள மொழியில் உச்ச தொனியில் திட்டினார்.

உங்களது கருத்தை எழுந்து நின்று கூறுமாறும் ஒளிந்து கொண்டு பேச வேண்டாம் என்றும் கூறினார்.

இதனால்,- நேற்றைய குழு நிலையின் இரண்டாம் நாள் முற்பகல் விவாதத்தி்ல் முக்கோண அடிப்படையில் குழப்ப நிலையும் உருவாகியிருந்தது.

 

Web Design by Srilanka Muslims Web Team