மங்கள எம்.பி.யின் வீட்டில் திருடியவர் கைது - Sri Lanka Muslim

மங்கள எம்.பி.யின் வீட்டில் திருடியவர் கைது

Contributors

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் வீட்டிலிருந்த பொருட்கள் சிலவற்றைத் திருடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொறட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த 30ஆம் திகதி திங்கட்கிழமை, பாணந்துறை, கெசல்வத்தையிலுள்ள மங்கள சமரவீர எம்.பி.யின் வீட்டின் மேல்மாயில் கூரையை பிரித்துக்கொண்டு உள்நுழைந்துள்ள சந்தேக நபர், அங்கிருந்த விஸ்கி போத்தல்கள் 7 மற்றும் மடிகணினியொன்று போன்றவற்றைத் திருடிச் சென்றுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(tm)

Web Design by Srilanka Muslims Web Team