மங்கள சமரவீரவின் வீட்டிற்குள் புகுந்த திருடன் - Sri Lanka Muslim

மங்கள சமரவீரவின் வீட்டிற்குள் புகுந்த திருடன்

Contributors

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் பாணந்துறை வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாணந்துறை – கெசல்வத்த – ஹொரகான பிரதேசத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் நேற்று (30) பகல் 1.45 அளவில் திருடர்கள் உள்நுழைந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஆனால் திருடர்கள் எதனையும் திருடிச் சென்றதாக தகவல் கிடைக்கவில்லை.

பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அத தெரண)

Web Design by Srilanka Muslims Web Team