மங்கள சமரவீரவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு - Sri Lanka Muslim

மங்கள சமரவீரவின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Contributors

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு சொந்தமான பாணந்துறை பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரவு பகலாக இந்த பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

(30) பகல் வேளையில் குறித்த வீட்டினுள் கொள்ளையர்கள் நுழைந்ததாக மங்கள சமரவீர முறைப்பாடு செய்திருந்தார்.

எவ்வாறாயினும் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் எந்த பொருட்களையும் கொள்ளையிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மேசை லாச்சி ஒன்றை திறந்துள்ளனர் எனவும் அதில் வங்கி காசோலை புத்தகம் மற்றும் பல ஆவணங்கள் இருந்ததாக மங்கள சமரவிர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கை ரேகை அடையாளங்களை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விசாரணைகளை மேற்கொள்வதற்காக மோப்ப நாய்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மங்கள சமரவீர பாராளுமன்றில் சபாநாயகர் சமல் ராஹபக்‌ஷவிடம் சில தினங்களுக்கு முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team