மங்கள சமரவீர அவர்களின் மறைவு குறித்து ஆழ்ந்த கவலையினை தெரிவித்து வெள்ளைக் கொடிகளை கட்டிய மக்கள் காங்கிரஸின் புத்தளம் நகர கிளை..! - Sri Lanka Muslim

மங்கள சமரவீர அவர்களின் மறைவு குறித்து ஆழ்ந்த கவலையினை தெரிவித்து வெள்ளைக் கொடிகளை கட்டிய மக்கள் காங்கிரஸின் புத்தளம் நகர கிளை..!

Contributors

இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை மக்களது நலன் தொடர்பில் சதாவும் பேசிவந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் நகர கிளை தமது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டுள்ளது.


அரசியல் கட்சிகளுக்கு அப்பால் சிறந்த மனித நேயத்துடனும்,அகன்ற பார்வையுடனும் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தமது காலத்தில் சிறுபான்மை முஸ்லிம்,தமிழ் மக்களுக்காக பெரும் பணியாற்றிய ஒருவர் என்பதுடன் கடந்த அரசாங்கத்தில் ஜெனீவா தொடரில் இலங்கை நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அன்னாரது மறைவு மனித நேயத்தினை விரும்பும் அனைத்துள்ளங்களுக்கும் வேதனை தரும் செய்தியாகும் என்பதுடன்,பிரிவினால் துயறுரும் குடும்பத்தினருக்கு புத்தளம் நகர அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை தனது அனுதாபத்தை தெரிவிக்கின்றது.
இதே வேளை முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் இணைப்பு செயலாளரும், புத்தளம் கிளையின் ஆலோசகருமான தேசமான்ய அல்-ஹாஜ்.இர்ஷாத் றஹ்மத்துல்லா, புத்தளம் நகர கிளை அமைப்பாளர் எம்.எச்.முஹம்மத், சமூக ஆர்வாலர் முஜாஹித் நிசார் ஆகியோர் அவரது ஆத்ம சாந்திக்காகவும், அவரது இழப்பின் வேதனையில் பங்கெடுக்கும் வகையில் புத்தளம் நகரத்தில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team