மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டரை நீல நிறமாக மாற்றி மோசடி..! - Sri Lanka Muslim

மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டரை நீல நிறமாக மாற்றி மோசடி..!

Contributors

மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டரை நீல நிறமாக மாற்றி லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைத்து எரிவாயு அடங்கிய புதிய சிலிண்டரை பெற்றுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பலமாகி யுள்ளது.

கடந்த 27ஆம் திகதி ஒரு பெண் இச்செயலில் ஈடுபட்டதாக சிசிடிவி காணொளி வெளிப்படுத்தியுள்ளது.

அட்டன் டிக்கோயாவிலுள்ள ஓர் எரிவாயு வியாபாரியிடமே இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடையின் சிசிடிவி காட்சிகளின்படி நேற்று(28) வெற்று எரிவாயு சிலிண்டர்களை லொறியில் ஏற்றும்போது சிலிண்டர் மஞ்சள் நிறமாக மாறியது தெரியவந்தது.

இதையடுத்து கடையின் வியாபாரி சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனிடையே நுகர்வோரின் தேவைக்கேற்ப லாஃப் எரிவாயு இன்னும் சந்தைக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team