மட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டது..! - Sri Lanka Muslim

மட்டக்களப்பில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டது..!

Contributors

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, இன்று (20) காலை முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களை சேர்ந்த 42 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team