மட்டக்களப்பு இணைப்பாளராக ஓட்டமாவடி சபீர் மெளலவி ஐக்கிய தேசிய கட்சியினால் நியமனம். » Sri Lanka Muslim

மட்டக்களப்பு இணைப்பாளராக ஓட்டமாவடி சபீர் மெளலவி ஐக்கிய தேசிய கட்சியினால் நியமனம்.

20171231_173329

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இணைப்பாளராக முஸ்லிம்கள் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய இளைஞர் முன்னனியினால் நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வைத்து முன்னணியின் தவிசாளரினால் சபீர் மெளவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா துகுதிக்கான இளைஞர் அமைப்பாளராக இருக்கும் சபீர் மெளலவிகு இந்த நியமன உடனடியாக கட்சியின் தலைமையின் சிபார்சுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளமையானது உள்ளூராட்சி தேர்தலில் ஓட்டமாவடியினை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக மாற்றியமைப்பதற்கு சபீருக்கு இலகுவான காரியமாக அமையும் என்பது முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

அத்தோடு ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தினை எப்படியாவது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக மாற்றி ஓட்டமாவடி பிரதேச சபையினை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றுவதற்கும் அதனோடு சேர்த்து விகிதாசார முறையில் சபீர் மெளலவியினை பிரதேச சபை உறுப்பினராக உள்வாங்கி பிரதி அமைச்சர் அமீர் அலியின் ஆலோசனைக்கு அமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தினை சபீர் மெளலவி பெற்றுக்கொள்வதற்கு இந்த நியமனம் முக்கிய விடயமாக மாறும் என்பது பலருடைய கருத்தாக இருக்கின்றது.

20171231_173329 26231134_384142498677787_7733323752783718649_n (1)

Web Design by The Design Lanka