மட்டக்களப்பு சிறைச்சாலையினால்  திருப்பெருந்துரை பகுதியில்  வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு எனும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ..! - Sri Lanka Muslim

மட்டக்களப்பு சிறைச்சாலையினால்  திருப்பெருந்துரை பகுதியில்  வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு எனும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ..!

Contributors

எப்.முபாரக் 

விவசாய அமைச்சும், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு  இராஜங்க அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் திருப்பெருந்துரையில் வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு எனும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று(26) சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜங்க அமைச்சர் லொகான் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சொந்தமான திருப்பெருந்துரையிலுள்ள இருபது ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய காணியில் வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு சேதனப்பசளை உற்பத்தி மற்றும் காய்கறி உற்பத்திகளை பெற்றுக்கொள்ளல் இதன் நோக்கமாகும்.

சிறைவாசம் அனுபவித்து கைதிகளை பயன்படுத்தி உற்பத்திகளை பெற்றுக்கொள்வதும் இவ்வேலைத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

இதன் போது கைதிகளினால் செய்கை பண்ணப்பட்ட மரக்கறி வகைகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மகிந்தானந்தே அழுத்கமகே,சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை, பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவ சந்திரகாந்தன் மற்றும் 

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல் தெனிய,பதில் ஆணையாளர் நாயகம் உடுவர மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜேசேகர,பிரதான ஜெயிலர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team