மட்டக்களப்பு, நெளுகல தொல்பொருள் நிலையத்தின் அறிக்கை சமர்ப்பிப்பு! - Sri Lanka Muslim

மட்டக்களப்பு, நெளுகல தொல்பொருள் நிலையத்தின் அறிக்கை சமர்ப்பிப்பு!

Contributors

மத்திய கலாசார நிதியத்தால், மட்டக்களப்பு, நெளுகல தொல்பொருள் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் அறிக்கை, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்ரமநாயக்க ஆகியோரிடம் வழங்கினார்.

தொல்பொருள் தளத்தில் உள்ள பழைய கட்டடங்கள், தொட்டிகள், தூபிகள் மற்றும் ஆசனகாரங்கள் உட்பட தொல்பொருள் மதிப்புள்ள பல தகவல்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

கோறளைப்பற்று மேற்கு பிராந்திய செயலகத்துக்குட்பட்ட வடமுனை கிராம சேவை களத்தில் அமைந்துள்ள நெலுகல தொல்பொருள் தளம், 2,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹஸ்பர்

Web Design by Srilanka Muslims Web Team