மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! - Sri Lanka Muslim

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

Contributors

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 7500 ரூபா கொடுப்பனவுகளை இடைநிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை (27) வைத்தியசாலைக்கு முன்பாக கனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் கிழக்கு மாகாண செயலாளர் பி.பிரபாகரன் தலைமையில் மட்டு போதனா வைத்திய சாலைக்கு முன்னாள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து மதிய உணவு விடுமுறை வேளையில் வைத்தியசாலைக்கு முன்னாள் அங்கு கடமையாற்றிவரும் சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதன்போது அமைய ஊழியர்களை நிரந்தரமாக்கு வானம் அளவு விலை உயர்வு கெடுப்பனவு வெட்டு, நாடேமூடி நாங்கள் விழித்திருந்தோம், 7500 ரூபா கொவிட் கொடுப்பனவை தொடர்ந்து வழங்கு, வாக்குறுதி அளிக்கப்பட்ட தற்காலிக நியமனங்களை நிரந்தரமாக்கு, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் அரை மணித்தியாலம் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் பின் கலைந்து சென்றனர்.

தமது சுகாதார ஊழியர்களுக்கு கடந்த யூன் மாதம் தொடக்கம் வழங்கப்பட்டுவந்த கொவிட் விசேட கொடுப்பனவான 7500 ரூபாவை தற்போது இடைநிறுத்தியுள்ளனர். எனவே இந்த கொடுப்பனவு தொடர்ந்து வழங்கவேண்டும் அத்தோடு 8 கோரிக்கைகளை முன்வைத்து எமது தாய்சங்கம் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டிருக்கின்றனர் எனவே எங்களது கோரிக்கைக்கு அரசு தீர்வு வழங்காவிட்டால் அடுத்தகட்டமாக சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிழக்கு மாகாண செயலாளர் பி.பிரபாகரன் தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team