மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக அஹ்சாப் நியமனம் » Sri Lanka Muslim

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக அஹ்சாப் நியமனம்

a430a198-c3dc-4242-b578-2f6110c64731

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 (ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வர்த்தகப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த முகம்மட் இப்றாஹிம் அஹ்சாப் அண்மையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் அரச சேவையில் முதன்முறையாக 2005 ம் ஆண்டு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் திட்டமிடல் நிதி உதவியாளராக பணியாற்றியதோடு பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்திலும் கடமை புரிந்தார். 2007ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட இவர் ரிதிதென்ன இக்ரஃ வித்தியாலயம், ஓட்டமாவடி தேசிய பாடசாலைகளில் கடமை புரிந்ததோடு அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையிலும் சித்தியடைந்து ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்திலும் பிரதி அதிபராக கடமை புரிந்துள்ளார்.

பின்னர் இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) பரீட்சையில் சித்தியடைந்த இவர் தற்போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் வர்த்தப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக தனது கடமையினை பொறுப்பேற்றுள்ளார் புதிதாக தனது பொறுப்பினை கடமையேற்ற இவருக்கு கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள் எனப்பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka