மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவையில் 1179 தமிழ்-முஸ்லிம் பட்டதாரிப் பயிலுனர்கள் இணைப்பு - Sri Lanka Muslim

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவையில் 1179 தமிழ்-முஸ்லிம் பட்டதாரிப் பயிலுனர்கள் இணைப்பு

Contributors

  

(பழுலுல்லாஹ் பர்ஹான்;)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்வின் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 1179 தமிழ்-முஸ்லிம் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு முதற்கட்டமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 07-12-2013 சனிக்கிழமை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும்,மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரன்,முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்,தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,ஜனாதிபதியின் விஷேட ஆலோசகருமான சிவநேசதுறை சந்திரகாந்தன்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் உட்பட மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்சலியன்,மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் , பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்

,மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட மாவட்ட செயலகத்தின் சிரேஷ் உத்தியோகத்தர்கள்,உதவி மாவட்ட செயலாளர்,திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இதன் போது அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 1179 தமிழ்-முஸ்லிம் பட்டதாரிப் பயிலுனர்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர  நியமனம் பிரதியமைச்சர்களான  ஹிஸ்புல்லாஹ்,விநாயக மூர்த்தி முரளிதரன், அரசாங்க அதிபர் சார்ள்ஸ்,மாகாண சபை உறுப்பினர்களான சிவநேசதுறை சந்திரகாந்தன், சிப்லி பாரூக் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

ba3

 

ba4

 

 

 

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team