மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி! - Sri Lanka Muslim

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி!

Contributors

மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பணியாற்றி வரும் ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று (30) ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ், தியாகி அரக்கொடை நிதியத்தின் தலைவர்  வாமதேன் தியாகேந்திரனிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது சமூகப்பணியாற்றி வரும் சமூக செயற்பாட்டாளர்களும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் இத்திட்டத்தில் 15 பேருக்கு நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 45 ஊடகவியலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வீதம் நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team