மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரை ரயில் பாதையை விஷ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? ஏ. ஆர் மன்சூர் கேள்வி - Sri Lanka Muslim

மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரை ரயில் பாதையை விஷ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? ஏ. ஆர் மன்சூர் கேள்வி

Contributors

இவ்வாறு முன்னாள் வர்த்தக வாணித்துறை அமைச்சரும் முன்னாள் குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவருமான ஏ. ஆர் மன்சூர் கேள்வி எழுப்புகிறார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

 

மட்டக்களப்பு வரையுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஷ்தரிக்கப்பட வேண்டும். கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாறைப் பிரதேச சிங்கள மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும்.

 

அதற்காக மட்டக்களப்பு – பொத்துவில் வரை ரயில் சேவைக்கான பாதை உருவாக்கப்பட வேண்டும் என்ற இலட்சியத்துடன் 1992 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியின் ஆட்சியில் வர்த்தக, வாணிப்பத்துறை அமைச்சராகவும் கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகவும்; இருந்த நான் அதற்கான முயற்சியை  மேற்கொண்டேன்.

 

இது தொடர்பில் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிடம் எடுத்துரைத்தற்கேற்ப, அவரின் அனுமதிக்கிணங்க நான் உட்பட முக்கிய அமைச்சர்கள் கொண்ட விஷேட குழுவொன்று ஈரான் இஸ்லாமியக் குடியசிக்குச் சென்று இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.

 

;அதன் பயனாக, 1993ஆம் ஆண்டு ஈரான் அரசியின் பொறியியல் நிபுணர்குழு இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்துக்கு விரைந்து, ரயில் போக்குவரத்துப் பாதையை மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை விஸ்தரிப்புச் செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, அதற்கான திட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்தனர்.

 

ஈரான் இஸ்லாமியச் குடியரசின் நிதி உதவியினூடாக விஸ்தரிப்புக்கான  நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த காலத்தில,; அதாவது 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலினால்   ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துடன் இத்திட்டம் கைவிடப்பட்டது. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட நான்; திட்டமிடப்பட்டும் தோற்கடிக்கப்படடேன்;.

 

அதன் பின்னர், இந்த ரயில் ;பாதை விஸ்தரிப்பு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் பின்னர் வந்த கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த அமைச்சர்களாளோ அல்லது பிரதி அமைச்சர்களோலோ பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களாலோ இந்த ரயில் பாதையை அமைப்பதற்காக அல்லது  நான் முன்னெடுத்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்க முயற்சிக்கப்படவில்லை.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்த போதிலும,; என்னால் முன்னெடுப்பட்ட இம்முக்கியத்துவமிக்க மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான புகையிரதப் பாதை விஸ்தரிப்பை மேற்கொண்டு உரிய காலத்துக்குள் முடித்துக்கொள்ள அக்கறைகாட்டாமல் போனது இப்பிரதேச மக்களுக்கு நிகழ்ந்த பெரும்துரஷ்டவசம் என்றே சொல்ல வேண்டும்.

 

1992ஆம் ஆண்டு என்;னால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி முற்றுப்பெறாமல் தொடரப்பட்டிருந்தால் கிழக்கின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசம் பெரும் நன்மையடைந்திருக்கும். மக்களின் வாழ்வு செழிப்புற பொருளாதர வளர்ச்சி ஏற்பட்டிருக்கும்.
மட்டகளப்பு முதல் பொத்துவில் வரையான தூரம் ஏறக்குறைய 100 கிலோமீற்றர்களாகும்.

 

1992ஆம் ஆண்டு முதல் இற்றைவரை 22 வருடங்கள் கழிந்தோடியுள்ளன. என்னால் முன்னெடுக்க்பட்ட இத்திட்டமானது என்னுடைய அரசியல் அதிகாரத்தோடு நின்றுவிடாது, பின்னர் வந்த  அரசியல் அதிகாரங்களைக் பெற்றுக்கொண்டவர்களினால் ஒரு வருடத்துக்கு 5 கிலோமீற்றர் தூரம் வரை இப்பாதை விஸ்தரிப்பு நடவடிக்கைகயை மேற்கொள்ள அவர்களின் அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் இன்று கிழக்குக் கரையோர தமிழ், முஸ்லிம் மக்கள் மாத்திரமின்றி அம்பாறைப் பிரதேச சிங்கள மக்கள் கூட பெரும் நன்மையடந்திருப்பார்கள்.  மட்டக்களப்பிலிருந்து பொத்துவிலுக்கு ரயிலில் பயணித்திருப்பார்கள். .

 

இருப்பினும், கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி; இப்பாதை விஸ்தரிப்பின் அவசியம் தொடர்பிலும் அதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான ரயில் பாதையை நிர்மாணிக்க ஆவண செய்யுமாறும் கோரி அதிமேதகு ; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் வெதமகுதவினால் 2012ஆம் ஆண்டு நவம்பர் மதாம் 5ஆம் திகதியிடப்பட்ட பதில் கடிதம் எனக்குக் கிடைக்கப்பெற்றது. அதில்   தங்களது வேண்டுகோள் தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரினால் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதுகுறித்த பத்திரிகைச்  செய்திகளும் வெளிவந்திருந்தன. ஆனால், அப்பதிலோடு தொடர்புபட்ட நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

 

இருந்தபோதிலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதமளவில் இலங்கைப் புகையிரத் திணைக்களத்தின் பொது முகாமையாளரைச் சந்தித்து ஜனாதிபதியின் உதவிச் செயலாளரிடமிருந்து வந்த கடிதம் தொடர்பில் எடுத்துரைத்தபோது, அவரினால் வழங்கப்பட்ட பதில் திருப்தியாக அமையவில்லை. இவ்வாறான அக்கறையற்ற நிலை கிழக்குக் கரையோர மக்களின் அபிவிருத்தியில் அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லையா என கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசாங்க அமைச்சர்களிடமும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடமும் இவ்விடம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளேன். அவர்களும் இப்பாதை விஷ்தரிப்பு நடவடிக்கைக்காக ஏதாவது செய்துள்ளார்களா என்றால் அதுவுமில்லை.

 

அரசாங்கம் அதிவேக நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் புகையிரப் பாதைகள் என்பவற்றிற்காக கோடிக்கணக்கான ரூபாய்க்களை செலவு செய்து வருகிறது. கிழக்கு மாகாணத்தில் உல்லாசத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொத்துவில் அருகம்;பை, உல்லை போன்ற பிரதேசங்கள் சுற்றுலாத்துறைக்கான கேத்திர நிலையங்களாக மாறி வருகிறது. சமாதான சூழல் காணப்படுகிறது.

 

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு முதல்  பொத்துவில் வரையான ரயில் பாதையை விஷ்தரிப்புச் செய்ய அரசாங்கமும் இப்பிரதேச அமைச்சர்களும் அக்கறைகொள்ளாதிருப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்புகிறார்.

 

மேலும் நான் கல்முனைப் பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 1979ஆம் ஆண்டு காலத்தில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கான ஆசன முன்பதிவு நிலையமொன்றை கல்முனையில் திறந்து வைத்தேன். அதனால் மட்டக்களப்பிலிருந்து ரயில் பயணத்தினூடாக தூரப் பிரதேசங்களுக்குச் செல்வோர் ஆசனங்களை இலகுவில் பதிவு செய்யக் கூடியதாகவிருந்தது. இக்காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக மட்டக்களப்புக்கான ரயில்சேவை பொலனறுவை வரை மட்டுப்படுத்தபட்டிருந்ததனால்; இவ்வாசன முன் பதிவு நிலையம் 1983இல் மூடப்பட்டது.

 

தற்போது எவ்வித பிரச்சினையுமின்றி மட்டக்களப்புக்கும் மட்டக்களப்பிலிருந்தும் ரயில் சேவைகள் இடம்பெறுகின்ற போதிலும் 31 வருடங்களுக்கு முதல் மூடப்பட்ட இந்த ஆசன முன்பதிவு நிலையத்தைக் கூட திறந்து வைப்பதற்கு அதிகாரத்தில் உள்ள எந்தவொருவரும் முயற்சி செய்ததாகத் தெரியவில்லை.

 

 இந்த ஆசன முன் பதிவு நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் போக்குவரத்து அமைச்சுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட முன்னால் அமைச்சர் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலாவது கிழக்குக் கரையோரத்திற்கான ரயில் பாதையை விஷ்தரிக்க கவனம் செலுத்த வேண்டுமென அரசாங்கத்தைக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team