மட்டு-மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பான கலந்துரையாடல்.படங்கள் - Sri Lanka Muslim

மட்டு-மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பான கலந்துரையாடல்.படங்கள்

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

ஆசிய மன்றத்தின் அனுசரனையில் ஆசிய மன்றத்தினால்; உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பான கலந்துரையாடல்  22-09-2014 நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு சத்துறுக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.

 

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளரும்,மாகாண உள்ளுராட்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற வரி அறவீடுகள் தொடர்பான இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் கலந்து கொண்டார்.

 

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 

இதில் முத்திரை வரி பெறுவதிலுள்ள நடைமுறை பிரச்சினைகள்,அதனனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

 

இங்கு உள்ளுராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பான விளக்கத்தை ஆசிய மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.வலீத் நிகழ்த்தினார்.

 

இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எம்.ஐ.எம்.மாஹிர் ,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல், ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அலி சாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

12

 

13

 

14

 

15

 

Web Design by Srilanka Muslims Web Team